New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/18/aniruth-2025-07-18-17-14-16.jpg)
தொடர்ந்து ரஜினிகாந்த் படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் தற்போது இளைஞர்களின் நாடித்துடிப்பாக இருப்பது இசையமைப்பாளர் அனிருத். ராக்ஸ்டார் என்று அழைக்கப்படும், இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தில் அமைந்த ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, கத்தி, வேதாளம், பேட்ட, தர்பார் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைத்துள்ளார். தொடர்ந்து ரஜினிகாந்த் படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான மோனிகா என்ற பாடல், பலரின் ரிங்டோனாக மாறியுள்ளது. அடுத்து தமிழில், கூலி, ஜெயிலர் 2, மதராசி, விஜயின் கடைசி படமான ஜனநாயகன், தெலுங்கில் கிங்டம், கன்னடத்தில் டாக்ஸிக், உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இசை மட்டும் இல்லாமல், பாடகராகவும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள அனிருத், அவ்வப்போது வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி தனது ரசிகர்களை குழிப்படுத்தி வருகிறார்.
ரஜினிகாந்தின் நெருங்கிய உறவினராக இருக்கும் அனிருத் திரைத்துறையில் இசையில் சாதித்துள்ளார். ஆனால் அவரது அப்பா யார் என்று தெரியுமா? அவரும் பிரபல நடிகர். சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக விசு இயக்கத்தில் அவர் நடித்த படங்களில் அவருக்கு நெகடீவ் கேரக்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நடிகர் வேறு யாரும் இல்லை ரவி ராகவேந்திரா தான்.
1984-ம் ஆண்டு வாய் சொல்லில் வீரனடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து, சிவாஜியுடன் ஆனந்த் கண்ணீர், கமல்ஹாசனுடன் காதல் பரிசு ஆகிய படங்களில் நடித்திருந்த இவர், 1990-ம் ஆண்டு விசு இயக்கத்தில் வெளியான வரவு நல்ல உறவு, வேடிக்கை என் வாடிக்கை ஆகிய இரு படங்களிலும் நெகடீவ் கேரக்டர்களில் நடித்திருந்தார். அதன்பிறகு தூள் பறக்குது என்ற படத்தில் நடித்த இவர், 1999-ம் ஆண்டு ரஜினியுடன் படையப்பா படத்தில் நடித்திருந்தார்.
2003-ம் ஆண்டு, சரத்குமார் நடிப்பில் வெளியான திவான் படத்தில் நடித்திருந்த ரவி ராகவேந்திரா, 8 ஆண்டுகள் இடைவெளிக்கு பின், சிம்பு நடிப்பில் 2008-ம் ஆண்டு வெளியான வானம் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து இவரும் இவர், சூர்யாவின் கங்குவா, சொர்க்க வாசல், அஜித்தின் விடா முயற்சி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.