Advertisment

ரூ. 100 கோடி வசூலித்த பாலிவுட் படம்.. அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட பிரபல நடிகை.. மேலும் செய்திகள்

த காஷ்மீர் ஃபைல்ஸ் படம், காஷ்மீரிலிருந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாகும்.

author-image
WebDesk
New Update
ரூ. 100 கோடி வசூலித்த பாலிவுட் படம்.. அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட பிரபல நடிகை.. மேலும் செய்திகள்

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஐஸ்வர்யா..

Advertisment

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த பிப்ரவரி தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதற்கு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு காய்ச்சல் மற்றும் தலைச்சுற்றல் இருப்பதால் சிகிச்சை பெற்று வருகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள ஐஸ்வர்யா மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஐஸ்வர்யா தற்போது 'முசாபிர்' என்ற ஆல்பம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த ஆல்பம் தமிழில் 'பயணி', தெலுங்கில் 'சஞ்சாரி', மலையாளத்தில் 'யாத்ராக்காரன்', ஹிந்தியில் 'முசாபிர்' என்று வெளியாக உள்ளது. இந்த ஆல்பத்தின் போஸ்டரை ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஏற்கெனவே வெளியிட்டுள்ளார்.

பீஸ்ட் பட பாடலுக்கு பாலிவுட் நடிகருடன் நடனமாடிய பிரபல நடிகை

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன.

இப்படத்தில் பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இப்பாடல் பல சாதனைகளை படைத்து வருகிறது.

தற்போது அரபிக் குத்து பாடலுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடனமாடிய வீடியோவை அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சமந்தா போஸ்டுக்கு கமென்ட் செய்த நாக சைதன்யா உறவினர்!

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்தவர். தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை காதலித்து 2017இல் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு திருமண வாழ்வை முடித்துக் கொள்வதாக இருவரும் கூட்டாக சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டனர்.

இருவரின் பிரிவுக்கும் பல காரணங்கள் கூறப்பட்டாலும் சினிமாவில் எல்லை மீறி கவர்ச்சியாக சமந்தா நடிப்பதை நாக சைதன்யா குடும்பத்தினர் ஏற்க மறுத்ததே முக்கியமான பிரச்சனையாக கூறப்படுகிறது.

இதனாலேயே இருவரும் பிரிய நேரிட்டதாகவும் ஆந்திர ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இரு்ககும் சமந்தா வெளியிட்ட போஸ்ட் ஒன்றுக்கு கமென்ட் செய்துள்ளார் நாக சைதன்யாவின் உறவினர்.

நடிகர் வெங்கடேஷின் மகளும் உணவு வலைப்பதிவாளருமான ஆஷ்ரிதா டகுபதி ஹார்ட்டின் கண்களுடன் கூடிய எமோஜியை கமென்ட் செக்ஷனில் பதிவு செய்தார். இதனை சமந்தாவின் ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ள முடித்துள்ள சமந்தா தெலுங்கு, தமிழ் என பிராந்திய மொழிகளில் உருவாகும் சாகுந்தலம் படத்திலும் நடித்து வருகிறார்.

இதுதவிர அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என்ற படத்திலும் அவர் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ரூ. 100 கோடி வசூலித்த பாலிவுட் படம்

நடிகை அலியா பட் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள கங்குபாய் கதியாவாடி திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெற்றியை பர்கர் சாப்பிட்டு கொண்டாடினார் அலியா பட். மாஃபியா ராணியாக நடித்த அலியா பட், இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்.

இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூல் சாதனையை இந்தப் படம் நிகழ்த்தியுள்ளது. படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இந்த வெற்றியை பர்கர் சாப்பிட்டு கொண்டாடி மகிழ்ந்தார் அலியா பட். பர்கர் சாப்பிட்டு வெற்றியை கொண்டாடுவதாக தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவு வெளியிட்டிருந்தார் அலியா பட்.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடிப்பில் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் அலியா பட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அனுபம் கெர் படத்தை வெளியிட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை

பிரபல இந்தி நடிகர் அனுபம் கெர் நடித்துள்ள த காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இந்தப் படத்தில் படைத் தளபதி ரவி கன்னா கதாபாத்திரம் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி ஷாலினி கன்னா வழக்கு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி இயக்கியுள்ளார்.

விஜயகாந்தை பார்க்க விடவில்லை… கண்ணீர் விட்ட ராதாரவி!

படம் இன்று வெளியாக இருந்தது. பிரீமியர் ஷோவை பார்த்த ஷாலினி கன்னா, ரவி கன்னா கதாபாத்திரம் தவறாக காண்பிக்கப்பட்டுள்ளதாக படக் குழுவிடம் கூறியிருக்கிறார். ஆனால், அதை படக் குழு பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, ஷாலினி சட்ட உதவியை நாடியுள்ளார். த காஷ்மீர் ஃபைல்ஸ் படம், காஷ்மீரிலிருந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment