லியோ படத்தில் நடிக்க மறுத்த பிரேமம் நடிகை
வாரிசு படத்திற்கு பிறகு தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் மிஷ்கின், கவுதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில், நாயகியாக த்ரிஷா நடித்து வருகிறார். விஜய் த்ரிஷா இணையும் 5-வது படம் இது. இந்த படத்தில் முதலில் த்ரிஷா வேடத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவியிடம் பேசியுள்ளனர். ஆனால் கதையில் தனது கேரக்டருக்கு அவ்வளவு வலு என்று சாய் பல்லவி இந்த படத்தை நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொந்தமாக கோவில் கட்டிய வில்லன் நடிகர்
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் டேனியல் பாலாஜி அடுத்து விஜய் நடிப்பில் பைரவா, பிகில், பொல்லதவன், வட சென்னை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சென்னை ஆவடியில் சொந்தமாக அம்மன் கோவில் கட்டியுள்ளார். இந்த கோவில் கும்பாவிஷேகம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
விவேக் குறித்து ஏ,ஆர்.ரஹ்மான் உருக்கமான பதிவு
Missing comedy legend Vivek ..What a great loss 😢 https://t.co/RO4yPIGszB
— A.R.Rahman (@arrahman) March 13, 2023
தமிழ் சினிமாவில் காமெடி குணச்சித்திரம் மட்டுமல்லாமல் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ள விவேக் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திடீரென மரணமடைந்தார். இவரது மரணம் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ள நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளர். இதில் காமெடி லெஜணட் விவேக் சார் மிஸ் செய்கிறோம் தமிழ் சினிமாவிற்கு பெரிய இழப்பு என்று ஒரு காமெடி பதிவை டேக் செய்து வெளியிட்டுள்ளார்.
குடும்பத்துடன் பார்க்க வேண்டாம் – மன்னிடப்பு கேட்ட நடிகர் ராணா
Strictly watch alone - 18+ content - A https://t.co/4sjLizjgsh
— Rana Daggubati (@RanaDaggubati) March 12, 2023
பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் ராணா டகுபதி தமிழில் அஜித்துடன் ஆரம்பம், பெங்களூர் நாடகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடிகர் வெங்கடேஷூடன் இணைந்து ராணா நாயுடு என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த படத்தில் பல மோசமான காட்சிகள் இருப்பதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள். இந்த வெப் தொடரை குடும்பத்துடன் பார்க்க வேண்டாம் என்று கூறியுள்ளார்..
லோகேஷ் எனது மகன் – வில்லன் நடிகர் உருக்கம்
Happy birthday my brother, son, family @Dir_Lokesh, may God give you more success, peace, happiness and wealth, I am always with you for life, stay blessed. Love you! pic.twitter.com/9OW5Cj4pZo
— Sanjay Dutt (@duttsanjay) March 14, 2023
வாரிசு படத்திற்கு பிறகு தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் மிஷ்கின், கவுதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில், நாயகியாக த்ரிஷா நடித்து வருகிறார். இதில் தற்போது சஞ்சய் தத் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், என் சகோதரன், என் மகன், என் குடும்பத்தில் ஒருவன் லோகேஷ்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார் சஞ்சய் தத்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.