ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “இங்க நான் தான் கிங்கு” படத்தின் விமர்சனம்
கதைக்களம் :
திருமணம் நடக்க சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பதற்காக ரூ.25 லட்சம் கடன் வாங்கி வீடு காட்டுகிறார் மேட்ரிமோனியில் வேலை பார்க்கும் வெற்றிவேல் (சந்தானம்), தன் கடனை அடைக்க முன்வரும் பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக காத்துக்கொண்டிருக்கிறார். இது ஒருபுறம் செல்ல மறுபுறம் சென்னையில் பல்வேறு இடங்களில் குண்டு வைக்க தீவிரவாதிகள் திட்டமிடுகிறார்கள்.
சந்தானத்திற்கு ஒருவழியாக ஜமீன் குடும்பத்தில் திருமணம் நடக்கிறது. ஆனால் அந்த குடும்பத்தால் தன் கடனை அடைக்க முடியாது என தெரித்த பிறகு ஏமாற்றமடையும் சந்தானத்திற்கு ரூ.50 லட்சம் பரிசை வெல்லும் வாய்ப்பு ஏற்பட்ட அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் மீதி கதை
நடிகர்களின் நடிப்பு
சந்தானம் நக்கல், நையாண்டியுடன் தன் வழக்கமான நடிப்பில் கலக்கி இருக்கிறார். காமெடியுடன் சேர்த்து நடனத்திலும் இம்முறை கூடுதல் கவனம் செலுத்தியிருப்பது சிறப்பு. ஹீரோயின் பிரயாலயாவுக்கு ஒரு நல்ல ரோல் அதில் சிறப்பாக நடித்துள்ளார். மேலும் தம்பி ராமையா, முனீஸ்காந்த், பால சரவணன்,மனோபாலா, ஷேசு, மாறன், விவேக் பிரசன்னா என ஒட்டுமொத்த காமெடி பட்டாளமே இணைந்து காமெடி விருந்து கொடுத்துள்ளனர்.
இயக்கம் மற்றும் இசை
எழிச்சூர் அரவிந்தன் கதை எழுதி, ஆனந்த் நாராயண் இப்படத்தை இயக்கியுள்ளார். ரசிகர்களை நகைச்சுவையால் மூழ்கடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் இப்படத்தை எடுத்துள்ளனர். டி.இமானின் பின்னணி இசையும் பாடல்களும் சுமார் ரகமே
படத்தின் ப்ளஸ்
ஒன் லைன் நகைச்சுவைகள்
கலகலப்பான முதல் பாதி
சரவெடி காமெடிகள்
Fun காட்சிகள்
படத்தின் மைனஸ்
வேகத்தடையான பாடல்கள்
யூகிக்க கூடிய காட்சிகள்
எமோஷனல் காட்சிகள் ஒட்டவில்லை
மொத்தத்தில் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், கோடை விடுமுறைக்கு குடும்பங்களை குதூகலிக்க வைக்கும் படமாக இப்படம் அமைத்துள்ளது
நவீன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“