போயஸ் கார்டனில் வீடு வாங்கிய நடிகர்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான இருந்த சந்தானம் தற்போது முழுநேர ஹீரோவாக மாறிவிட்டார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஏஜெண்ட் கண்ணாயிரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே முன்னணி நடிகர்கள் வசிக்கும் போயர்ஸ் கார்டனில் வீடு வாங்கியுள்ளார். ஏற்கனவே ரஜினிகாந்த், ஜெயலலிதா, தனுஷ், ஜெயம்ரவி, விஜய் ஆண்டனி அட்லி உள்ளிட்ட பலர் போயர்ஸ் கார்டனில் வீடு வாங்கியுள்ள நிலையில், தற்போது ஏலத்தில் வந்த வீட்டை வாங்கி இந்த பட்டியலில் சந்தானமும் இணைந்துள்ளார்.
கூட்டம் இல்லாத தியேட்டர் – நயன்தாரா அதிர்ச்சி
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கனெக்ட். மாயா என்ற திகில் படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் திகில் படமாக உருவாக இந்த படம் 99 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டது. லாக்டவுன் காலத்தில் நடக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனிடையே மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில், நயன்தாரா கனெக்ட் படம் பார்க்க வருவதாக இருந்ததாம். ஆனால் கடைசி நேரத்தில் திரையரங்கு உரிமையாளர் படம் பார்க்க யாரும் வரவில்லை என்று கூறி நயன்தாராவை தியேட்டருக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி 67 படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இந்த படம் குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் மன்சூர் அலிகான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக பத்திரிக்கையாளர் கேள்விக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயுடன் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார். மன்சூர் அலிகான்.
வாரிசு டிரெய்லர் எப்போது?
விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள படம் வாரிசு. தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, யோகிபாபு, ஷாம் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், வாரிசு படத்தின் டிரெய்லர் வரும் டிசம்பர் 31-ந் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.
பிரபாஸ் கடனாளியா?
பாகுபலி படத்திற்கு பின் ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் நடிகர் பிரபாஸ்க்கு, ராதே ஷியாம், படம் தோல்வியை தந்தது. தற்போது அதிபுருஷ் என்ற படத்தில் நடித்துள்ளார். கோடிகளில் சம்பளம் பெரும் நடிகர் பிரபாஸ் தனது சொத்துக்களை வைத்து 21 கோடி கடன் பெற்றுள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“