சந்தானம் vs சூரி vs யோகிபாபு; ஒரே நாளில் மோதும் காமெடி ஸ்டார்ஸ்; உங்க ஃபேவரெட் எந்த படம்?

சந்தானம் , சூரி, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் வெளியாகவது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சந்தானம் , சூரி, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் வெளியாகவது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
Santhanam Soori Yogi

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக அறியப்பட்டு தற்போது ஹீரோக்களாக வலம் வரும் சந்தானம், சூரி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள 3 திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது திரைத்துறை வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி, பின்னாளில் ஹீரோக்களுக்கு, நண்பராக பல வெற்றிப்படங்களில் நடித்தவர் சந்தானம். அதன்பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார். இவற்றில் சில படங்கள் வெற்றியை பெற்றது. இதில் இவர் நடித்த தில்லுக்கு துட்டு திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அந்த படத்தின் 2-ம் பாகமாக தில்லுக்கு துண்டு 2, டிடி ரிட்டன்ஸ் ஆகிய படங்களை கொடுத்த சந்தானம் தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கௌதம் மேனன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் கீதா திவாரி, செல்வராகவன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படம் வரும் மே16-ந் தேதி வெளியாக உள்ளது.

திரைப்படங்களில் சிறிய கேரக்டரில் நடித்து பின்னாளில், முன்னணி காமெடி நடிகராக மாறிய சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்து கருடன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு, கொட்டுக்காளி, விடுதலை படத்தின் 2-ம் பாகத்தில் நடித்திருந்த சூரி தற்போது மாமன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

Advertisment
Advertisements

குடும்ப உறவுகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். விலங்கு வெப் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பிரஷாந்த் பாண்டியராஜன்’ இயக்கியுள்ள இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் மே 16-ந் தேதி இந்த படமும் வெளியாக உள்ளது.

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நடித்து புகழ் பெற்ற யோகி பாபு, அமீர் நடிப்பில் வெளியான யோகி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு, பல வெற்றிப்படங்களை கொடுத்த அவர், முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் காமெடி ஹீரோவாக வலம் வந்த யோகி பாபு மற்ற நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்துள்ள ஜோரா கைய தட்டுங்க என்ற படமும் மே 16-ந் தேதி வெளியாக உள்ளது.

காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடித்துள்ள 3 படங்கள் ஒரே நாளில் வெளியாவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தகவல் திரைத்துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

Soori Santhanam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: