/tamil-ie/media/media_files/uploads/2019/06/Santhanam-Dagaalty-First-look.jpg)
’சக்கப்போடு போடு ராஜா’ படத்தின் தோல்வியால் இருந்த நடிகர் சந்தானத்தை ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் வெற்றி புத்துணர்வு கொள்ளச் செய்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து, இவரின் அடுத்தப் படமான ‘ஏ1’ விரைவில் வெளியாகவிருக்கிறது. இதனை அறிமுக இயக்குநர் ஜான்சன் இயக்கியுள்ளார்.
Here goes the first look of #Dagaalty directed by @vijayanans co-starring @SenRittika@iyogibabu Produced by #18Reels@SPChowdhary3
Music by @VijayNarain
DOP @dopdeepakpadhy ????☺️ pic.twitter.com/54FLSCHIav
— Santhanam (@iamsanthanam) 6 June 2019
இந்நிலையில் இவரது அடுத்தப் படத்தின் ‘ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்’ வெளியிடப்பட்டுள்ளது. ‘டகால்டி’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் போஸ்டரில் ஸ்டைலிஷான மாஸ் லுக்கில் காட்சியளிக்கிறார் சந்தானம். அதோடு இப்படமும் காமெடி களத்தில் உருவாகிறது.
இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் விஜய் ஆனந்த் இதனை இயக்குகிறார். எஸ்.பி.சவுத்ரியின் ‘18 ரீல்ஸ்’, சந்தானத்தின் ‘ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ்’ இணைந்து இதனை தயாரிக்கிறது.
ரித்திகா சென் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், சந்தானத்துடன் இணைந்து காமெடி செய்யவிருக்கிறார் யோகிபாபு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.