scorecardresearch

மதத்தை தாண்டி மனிதத்தை வலியுறுத்தும் படம் : அயோத்தி விமர்சனம்

ஹீரோவாக இல்லாமல் கதையின் நாயகனாக இப்படத்தில் ஜொலிக்கிறார் சசிகுமார். நாடோடிகளுக்கு பிறகு, முன் பின், தெரியாதவர்களுக்கு உதவும் ஒரு இளைஞனாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

மதத்தை தாண்டி மனிதத்தை வலியுறுத்தும் படம் : அயோத்தி விமர்சனம்

சமீப காலமாக வந்த தமிழ் படங்களில் சிறந்த படமாக “அயோத்தி” வந்திருப்பதற்கான காரணங்களை இவ்விமர்சனத்தில் காணலாம்.

கதை:

அயோத்தியில் தீவிர இந்து குடும்பத்தினுடைய தலைவராக வரும் பல்ராம்(யஷ்பால் சர்மா), ஆணாதிக்க மனோபாவம் கொண்டவராக இருக்கிறார். அவர் தன் குடும்பத்துடன் இணைந்து ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை மேற்கொள்கிறார். அந்த பயணத்தில் எதிர்பாராத விதமாக அவரது குடும்பம் விபத்தில் சிக்கி அதில் ஒருவர் இறக்கிறார். முன் பின் தெரியாத ஊரில் சிக்கிக் கொள்கிறார் பல்ராம், இறுதியில் அந்த இறந்த சடலத்துடன் சொந்த ஊரான அயோதிக்கு எப்படி திரும்பி சென்றார்? அவருக்கு சசிகுமார் எவ்வாறு உதவினார்? என்பதை அழுத்தமாக கூறி இருக்கும் படமே அயோத்தி.

நடிகர்களின் நடிப்பு:

ஹீரோவாக இல்லாமல் கதையின் நாயகனாக இப்படத்தில் ஜொலிக்கிறார் சசிகுமார். நாடோடிகளுக்கு பிறகு, முன் பின், தெரியாதவர்களுக்கு உதவும் ஒரு இளைஞனாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார். பல எமோஷனல் காட்சிகளை தன் கண்களாலே வெளிப்படுத்தி நம்மை உருகவும் வைக்கிறார். கடந்த சில வருடங்களில் சசிக்குமாருடைய நடிப்பின் பெஸ்ட் படம் என இதை தைரியமாக சொல்லலாம்.

கதையின் மற்றொரு தூணாக வருவது யஷ்பால் ஷர்மா, ஆணாதிக்க மனநிலை கொண்ட ஒரு நபராகவே வாழ்ந்திருக்கிறார். அவர் நடிக்கிறார் என்பதை தாண்டி ரசிகர்களுக்கு அவர் செய்யும் செயல்கள் உண்மையாகவே கோபத்தை வரவழைப்பதாக இருப்பதே அவருடைய எதார்த்த நடிப்பின் சிறப்பு. வழக்கமான காமெடிகள் இல்லாமல் இப்படத்தில் முழு நீள குணசத்திர நடிகராக அசத்தியிருக்கிறார் புகழ்.

சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் போஸ் வெங்கட், வினோத், ராமச்சந்திரன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

இயக்கம் மற்றும் இசை:

நாம் பெரும்பாலும் மலையாள படங்களிலேயே பார்க்கும் இவ்வகையான உணர்வு சார்ந்த படத்தை தமிழில் எடுத்ததற்ககே மிகப்பெரிய பாராட்டுகள். ஒரு எதார்த்த ஒன் லைன் கதையை வைத்துக்கொண்டு, திரைக்கதையில் பல எமோஷனல் காட்சிகளை வைத்து,இயக்கத்தில் நம்மை உருக வைத்திருக்கிறார் இயக்குனர். அழுத்தமான வசனங்கள் இப்படத்திற்கு மிகப்பெரும் பலத்தை சேர்த்திருக்கிறது. படத்தின் பின்னணி இசை படத்தின் தன்மைக்கேற்ப அழகாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் வரும் பாடல் நம்மை கண்கலங்க வைக்கும் அளவிற்கு உணர்வு பூர்வமாக அமைந்திருப்பது சிறப்பு. அயோத்தியின் அழகையும், ராமேஸ்வரத்தின் அழகையும் திரையில் காட்டி நம்மை பிரம்மிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர்.

பாசிட்டிவ்ஸ்:

*எதார்த்த கதைக்களமும், அழுத்தமான வசனங்களும்.

* சசிகுமாரின் இயல்பான நடிப்பு.

*எமோஷனல் காட்சிகள் கனெக்டாகி இருக்கிறது.

*மனிதத்தை வலியுறுத்தும் காட்சிகளும் வசனங்களும் அப்லாசை பெறுகிறது.

*யஷ்பால் சர்மா மற்றும் துணை நடிகர்களின் நேர்த்தியான நடிப்பு.

நெகட்டிவ்ஸ்:

*சில காட்சிகள் சினிமாத்தனமாக அமைந்திருக்கிறது.

*ஹிந்தியில் பேசும் வசனங்களுக்கு சப்டைட்டில் சரியாக பொருந்தவில்லை.

*கிளைமாக்ஸ் பாடலைத் தவிர மற்ற பாடல்கள் தேவையற்றது.

மொத்தத்தில் சில இறக்கங்கள் இருந்தாலும்,இனம்,மதம் மொழிகளை தாண்டி மனிதனையும் மனிதத்தையும் போற்றும் ஒரு சிறந்த படமாக “அயோத்தி” அமைந்திருக்கிறது.

Overall – A Superb Feel good Emotional Drama.

Marks – (4/5)❤️❤️❤️❤️

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema sasikumar ayothi movie review in tamil