/indian-express-tamil/media/media_files/2025/05/03/NWdnecYhZHZGCzWq29dM.jpg)
வரலாற்று கதைக்களம் கொண்ட திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த வருட இறுதியில் அதற்கான அறிவிப்புகள் வரும் என சசிகுமார் கூறியுள்ளார். சிறுவனின் கதாபாத்திரம் ஒரு விஜய் ரசிகராக வடிவமைத்திருப்பதாகவும் விஜய் தற்போது அரசியலுக்கு சென்று விட்டதால், விஜயின் விஷயங்களை இதில் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.
இயக்குநர் அபிஷன் ஜீவின் இயக்கத்தில் நடிகர் நடிகைகள் சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு, ஆகியோர் நடிப்பில் குடும்ப திரைப்படமாக டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகியுள்ளது இந்நிலையில் திரைப்பட குழுவினரான நடிகர் சசிகுமார் மற்றும் இயக்குநர் அபிஷன் ஜீவின் ஆகியோர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் ரசிகர்களின் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய இயக்குநர் அபிஷன் ஜீவின், இந்த படத்தை வெற்றியடைய செய்த மக்களுக்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன். குடும்பத்தினர்களின் கவனத்தை ஈர்த்து விட்டால் படம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்ததால் முதல் படமாக குடும்ப படத்தை இயக்கினேன். இந்த திரைப்படத்தில் வரும் சிறுவனின் கதாபாத்திரம் ஒரு விஜய் ரசிகராக வடிவமைத்திருந்தேன். விஜய் தற்போது அரசியலுக்கு சென்று விட்டதால் விஜயின் விஷயங்களை இதில் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என எண்ணி சிறுவனின் கதாபாத்திரத்தை வடிவமைத்தேன் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய, நடிகர் சசிகுமார், இந்த திரைப்படத்திற்கு காலைக் காட்சியிலேயே குடும்பங்களுடன் வந்து படம் பார்த்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். தற்போது குடும்பங்கள் எல்லாம் ஓடிடி தளங்களில் படத்தை பார்க்கின்றனர். திரையரங்குகளுக்கு குடும்பங்களுடன் வருவதில்லை என்ற பேச்சு நிலவி வருவது குடும்பப் படத்தை நாம்(திரைத்துறையினர்) அளிக்கவில்லை என்று அர்த்தம்.
குடும்ப படங்கள் சிறிது காலங்களாக மறைந்திருந்தது. அது மீண்டும் இந்த திரைப்படம் மூலம் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. திரைப்பட விமர்சனங்கள் மூலம் கதைகளை வெளியில் சொல்லிவிட வேண்டாம். நடிகை சிம்ரன் எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல் எதார்த்தமாக நடித்திருக்கிறார். மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
தற்போது நடிகர் சூர்யாவின் திரைப்படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது எங்களது படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டோம். ஒரே சமயத்தில் நான்கைந்து படங்கள் வருவது சினிமாவிற்கு ஆரோக்கியமானது. வரலாற்று கதைக்களம் கொண்ட திரைப்படத்தை இயக்க இருக்கிறேன். இந்த வருட இறுதியில் அதற்கான அறிவிப்புகள். சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் நான் சாஃப்ட் ரோல் செய்திருந்தேன். ஆனால் கழுத்தை அறுக்கும் காட்சிகள் தான் பலரது மனதிலும் நினைவிருக்கிறது.
பான் இந்தியா படம் என்று தனியாக எதையும் எடுத்து விட முடியாது, ஒவ்வொரு மொழியிலும் பான் இந்தியா படங்களை எடுத்துவிட முடியாது பான் இந்தியா படங்கள் தமிழுக்கும் கிடைக்கும் பான் இந்தியா படங்களை முதலில் ஆரம்பித்ததே தமிழ் சினிமா தான். இயக்குனர் மணிரத்தினம் தான் பான் இந்தியா படத்தை முதலிலேயே இயக்கினார். அவர் இயக்கிய ரோஜா திரைப்படம், அதற்கு முன்பு வந்த சந்திரலேகா படமும் ஒரு பான் இந்தியா திரைப்படம் தான் என்று கூறியுள்ளார்.
இந்நிகழ்வில் பேசிய திரையரங்கத்தினர், இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே எதிர்பார்ப்பு நன்றாக இருந்ததாகவும் இந்த கோடை விடுமுறையில் அதிகமான திரையரங்குகள் இவர்களால் காப்பாற்றப்பட்டு இருக்கிறது என்று கூறலாம் என தெரிவித்தார். இந்த படத்தை குடும்பத்துடன் பலரும் வந்து மகிழ்ச்சியுடன் பார்த்து செல்வதாகவும் நன்றாக ஓடி வருவதாகவும் தெரிவித்தார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.