சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வரும் சட்டமும் நீதியும் என்ற வெப் தொடர் 12 நாட்களில் படமாக்கப்பட்டது என்றும், இதில் பல தேவையில்லாத காட்சிகள் வெட்டி எடுக்கப்பட்டது என்றும் அந்த படத்தில் நாயகனாக நடித்த சரவணன் கூறியுள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில், 1991-ம் ஆண்டு வெளியான வைதேகி வந்தாச்சு என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சரவணன். தொடர்ந்து, பொண்டாட்டி ராஜ்ஜியம், அபிராமி, பார்வதி என்னை பாரடி, விஸ்வநாத், சந்தோஷம் என பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். 2003-ம் ஆண்டு தாயுமாணவன் என்ற படத்தை இயக்கிய நடித்த சரவணவன், அதன்பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் விலகியிருந்தார்.
தொடர்ந்து 2007-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரன் படத்தின் மூலம் ரீ-என்டரி கொடுத்தார், இந்த படத்தில் அவர் நடித்த சித்தப்பு கேரக்டர் இன்றுவரை அவரின் அடையாளமாக மாறிவிட்டது. வெறும் சரவணன் என்று சொன்னால் தெரியாது. இப்போது சித்தப்பு சரவணன் என்றால் தான் பலருக்கும் தெரியும் அளவுக்கு அந்த கேரக்டர் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதன்பிறகு வில்லன், குணச்சித்திரம் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
இந்த வரிசையில் சமீபத்தில் வெளியான வெப் தொடர் தான் சட்டமும் நீதியும். ஜீ5-ல் வெளியாகியுள்ள இந்த வெப் தொடர் மொத்தம் 7 எபிசோடுகளை கொண்டது. நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைய அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த வெப் தொடர் கடந்த ஜூலை 18-ந் தேதி வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பலரின் பாராட்டுக்களையும் குவித்து வருகிறார்.
Advertisment
Advertisements
மேலும் இந்த வெப் தொடரில் சரவணன் தவிர மற்ற நடிகர்கள் அனைவரும் பெரும்பாலும் புதுமுக நடிகர்களாக உள்ளனர். ஆனாலும் இந்த வெப் தொடர் 12 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது என்று சரவணன் கூறியுள்ளார். இந்த படம் 12 நாட்களில் எடுக்கப்பட்ட படம். இதுவரை நான் யாரிடமும் இதை சொன்னது இல்லை. ஒரு வகையில் இது பெருமையான விஷயம் தான். 12 நாட்களில் எடுத்து சூப்பர் ஹிட் ஆக்கியுள்ளோம். அதனால தான் ஓப்பனா சொல்றேன்.
ஹிட் படத்தை 12 நாட்களில் எடுக்க முடியுமா? 20-25 நாள் இருந்தால் தான் ஒழுங்காக எடுக்க முடியாது. ஆனால் இந்த படத்தை 12 நாட்களில் முடிக்க முழுக்க முழுக்க இயக்குனர் பாலாஜி செல்வராஜ் தான் காரணம். காலையிலே 7 மணிக்கு பிரஸ்ட்ஷாட் எடுப்பார். ஆனால் காலையிலே கொஞ்சம் சீக்கிரம் வாங்க என்று சொல்வார். முதல் நாளே இனிமே இனிமே லேட்டா வரக்கூடாது என்று முடிவு பண்ணிட்டேன். கரக்ட் 7 மணி போய்விடும். அதே மாதிரி நைட் 9 மணி 10 மணி வரைக்கும் போனாங்க.
என்னை ஓடவிட்டாங்க. ஓடவிட்டு அங்கு ஒரு கேமரா இதுக்கு நீங்க எவ்வளவு நேரம் அங்க இருக்கணும். இந்த கேமராவுக்கு நீங்க மதியம் வரைக்கும் இருக்கணும். இந்த கேமராவுக்கு நீங்க 4 மணி இருந்து நைட் 9 மணி வரை இருக்கணும். மூன்று பக்கம் ஓடவிட்டு பார்த்தா ஆச்சரியமா இருக்கிறது. நிறைய எடுத்தாங்க. ஆனால் படத்தில் அதிகம் வரவில்லை. ஏன் இந்த காட்சி வரவில்லை என்று அவரிடம் போய் கேட்க முடியாது.
ஷார்ப்ப வரணும் அப்டிங்கிறதுக்காக அவ்வளவு உழைத்ததை சர்வ சாதாரணமாக தூக்கி போட்டாங்க. அதை எடுக்காமே இருந்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் நேரம் செலவு கமியாக இருந்துருக்கும். 10 நாட்கள் என்பதையே 8 நாட்களில் முடித்திருக்கலாம் என்று சரவணன் கூறியுள்ளார்.