ஆண்டவன் இருக்கான்… ரசிகைக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த் லேட்டஸ்ட் வீடியோ!

Tamil Cinema Update : கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக என்னால் நேரில் வந்து பார்க்க முடியவில்லை. ஆனால் நீங்கள் நலம்பெற நான் பிரார்த்தனை செய்கிறேன்.

Tamil Senior Actor Rajinikanth consolation to Fan : உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது ரசிகை ஒருவருக்கு நடிகர் ரஜினிகாந்த வீடியோ மூலம் ஆறுதல் கூறியுள்ள நிகழ்வு தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். இந்தியா மட்டுமல்லாது உலகளவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியசமின்றி பலரும் ரஜினியின் தீவிர ரசிகர்கள்களாக உள்ளனர். இதன் காரணமாக ரஜினி படம் வெளியாகும் போது அந்த நாளே திருவிழா போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும

படங்களில் நடிப்பது குறித்து பிஸியாக இருந்தாலும், ரஜினிகாந்த அவ்வப்போது தனது ரசிகர்களை சந்தித்து வருவதை வழக்கமான வைத்துள்ளார். அந்த வகையில். பெங்களூரை சேர்ந்த ரஜினிகாந்தின் தீவிர ரசிகையான சௌமியா என்ற பெண் ஒருவர் தற்போது உடல்நலம பாதிக்கப்பட்டு பெங்களூர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை அறிந்த ரஜினிகாந்த் உடனடியாக அந்த பெண்ணிடம் வீடியோ காலிங் மூலம் பேசியுள்ளார்.

அப்போது அவர், ஒன்றும் பயப்பட வேண்டாம். ஆண்வன் இருக்கிறான். கண்டிப்பாக நீங்கள் குணமடைந்து வீடு திரும்பவீர்கள். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக என்னால் நேரில் வந்து பார்க்க முடியவில்லை. ஆனால் நீங்கள் நலம்பெற நான் பிரார்த்தனை செய்கிறேன். தைரியமாக இருக்க வேண்டும் உங்களுடைய சிரிப்பு அழகாக இருக்கிறது என்று ரஜினிகாந்த அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

உல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரசிகை ஒருவருக்கு நடிகர் ரஜினிகாந் வீடியோ காலிங் மூலம் ஆறுதல் கூறிய வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரஜினி ரசிகர்கள் பலரும் இந்த வீடியோ பதிவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema senior actor rajinikanth consolation to fan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com