ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமான நடிகை சுவாதி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவு அவர் சீரியலில் இருந்து விலக போகிறாரா அல்லது சீரியல் முடிய போகுதா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், தற்போது அவர் கார்த்தி நடித்து வரும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஜப்பான். குக்கூ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான இந்த படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து. கார்த்தியின் 25-வது படம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது
தொடர்ந்து அடுத்து தனது 26-வது படமாக நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்து 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி தனது 27-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரவிந்த் சாமி இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
கார்த்தி – மற்றும் அரவிந்த் சாமி இடையேயான நட்பை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து இந்தியா க்ளிஸ்ஸில் வெளியாகியுள்ள செய்தியிள் படி, இந்த படத்தில் நாயகியாக ஈரமான ரோஜாவே சீரியலில் பிரியா கேரக்டரில் நடித்து வரும் நடிகை சுவாதி கொண்டே நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
கன்னடப் படங்களில் நடிகையாக அறிமுகமான ஸ்வாதி கொண்டே பின்னர் சின்னத்திரையில் அறிமுகமான நிலையில், தற்போது விஜய் டிவி சீரியலான ‘ஈரமான ரோஜாவே 2’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அடுத்து 'கார்த்தி 27' படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“