பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில் வெளியான வாரிசு, துணிவு ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இன்று ஷாருக்கான் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகியுள்ள பதான் படம் இரு படங்களும் ஈடுகொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆண்டுதோறும் ஜனவரி மாதங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் படங்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் அஜித் நடிப்பில் துணிவு விஜய் நடிப்பில் வாரிசு ஆகிய இண்டு படங்கள் வெளியாகின. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இரு படங்களும் வசூலில் சாதனை படைத்து வருகின்றன.
இதனால் அடுத்து பிப்ரவரி மாதம் வரை தமிழில் வேறு எந்த படங்களையிட தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை. தமிழில் அடுத்து புதிய படம் வெளியீடு பிப்ரவரி 3-ந் தேதிக்கு சென்றுள்ள நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு பாலிவுட்டில் ஷாருக்கான நடிப்பில் வெளியான பதான் படம் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
ஷாருக்கான் 4 வருட இடைவெளிக்கு பிறகு ரீ-எண்ட்ரி கொடுக்கும் படமாக அமைந்துள்ள இந்த பதான் படம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஷாருக்கான் தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடித்த பதான் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் வெளியாகியுள்ளது. ஆக்சன் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இதனால் இன்று வெளியான ‘பதான்’ படத்துடன் திரையரங்குகளில் ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ ஆகிய படங்களின் காட்சிகளை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷாருக்கான் நடித்த படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளிவருவதால் படத்திற்கு அதிக திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டு வாரங்களாக திரையரங்குகளில் 'துணிவு' மற்றும் 'வாரிசு' மட்டுமே திரையிடப்பட்டு வருவதாகவும், தற்போது இந்த இரண்டு படங்களுக்கும் முன்பதிவு குறைந்துள்ளதால், ரசிகர்கள் தற்போது புதிய படத்தைப் பார்க்க விரும்புவதாகவும், அதற்கு 'பதான்' படம் சிறந்ததாக இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிலீஸ் ஆன இரண்டு வாரங்களுக்குப் பிறகு 'வாரிசு' மற்றும் 'துணிவு' சுற்றி நடக்கும் சலசலப்பை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil