scorecardresearch

தயாரிப்பாளரே வில்லன்: புதுவையில் தமிழ் சினிமா ஷூட்டிங்

செட்டு போடாமல் இயற்கையாகவே படப்பிடிப்பிற்கு ஏற்றார் போல் புதுச்சேரி மாநிலம் அமைந்துள்ளது

Thambi ramaiah
புதுவை படப்பிடிப்பு நடிகர் தம்பி ராமைய்யா

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணை இயக்குனராக பணிபுரிந்த அனீஸ் அஷ்ரப் இயக்கத்தில் தம்பி ராமையா நடிக்கும் 13 நாள் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடக்கிறது.  இந்தப் படப்பிடிப்பு புதுச்சேரி ரயில்வே நிலையம் அருகில் ஒரு சைனீஸ் ரெஸ்டாரன்ட் இருந்து இன்று முதல் துவங்கியது.

இதுகுறித்து இயக்குனர் அனீஸ் அஷ்ரப் மற்றும் இணை இயக்குனர் பாலகணேசன் ஆகியோர் கூறுகையில், புதுச்சேரி அதன் சுற்றியுள்ள பகுதியில் எங்கள் கதை களத்திற்கு ஏற்றார் போல் வீதிகள் கடை அமைப்புகள் பிரெஞ்சு காலத்து ரோடு அமைப்புகள் கிராமத்தை ஒட்டிய நகரமாக இருப்பதால் எங்களுக்கு செட்டு போடாமல் இயற்கையாகவே படப்பிடிப்பிற்கு ஏற்றார் போல் புதுச்சேரி மாநிலம் அமைந்துள்ளது அதனால் இந்தப் பகுதியை நாங்கள் தேர்வு செய்தோம்.

நடிகர் தம்பி ராமையா இதில் முக்கிய கதாபாத் கதாபாத்திரத்தில் இருக்கிறார் ஹீரோ வெற்றி ஜிவி 1 ஜிவி 2 மெமரிஸ் வனம் கம்பன் உள்பட எட்டு படங்கள் நடித்தவர் அவர் இந்த படத்தில் ஹீரோவாக  நடிக்கிறார். ஹீரோயின் சில்பா மஞ்சுநாத் நடிக்கிறார். சின்னத்தம்பி ப்ரொடக்ஷன் இப்படத்தை தயாரிக்கின்றனர். தயாரிப்பாளரே இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் புதுச்சேரி மாநிலத்தில் படப்பிடிப்பு ஏற்ற ஊராக உள்ளது.

இப்படத்தை மகேஸ்வரன் தேவதாஸ் தயாரிக்கிறார் அவரே இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். அதேபோன்று எக்ஸிக்யூட்டி ப்ரொடியூசர் காசிலிங்கம் ஒளிப்பதிவாளராக அரவிந்த் குமார் பணியாற்றுகிறார் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema shooting in puducherry producer as a villan

Best of Express