நான் நினைத்தபடி இருக்க முடியவில்லை ஸ்ருதிஹாசன் பதிவு
கமல்ஹாசனின் மகளாக திரைத்துறையில் அறிமுகமான ஸ்ருதிஹாசன், தற்போது தெலுங்கு இந்தி மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கில் சங்கராத்தியை முன்னிட்டு சிரஞ்சீவி நடிப்பில் வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணா நடிப்பில் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இந்த இரு படங்களிலும் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இதனிடையே வீர சிம்ஹா ரெட்டி படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ருதிஹாசன் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்வில்லை. இது குறித்து ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர், உடல்நிலை சரியில்லை அதனால் தான் பங்கேற்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் தனக்கு மனரீதியான பிரச்சினை இருப்பதாகவும், வீட்டிலே படப்பிடிப்பு தளத்திலே நான் நினைத்தபடி இருக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
வாரிசு தயாரிப்பாளருக்கு பதிலடி கொடுத்த துணிவு தயாரிப்பாளர்
பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளை விஜய் நடிப்பில் வாரிசு, அஜித் நடிப்பில் துணிவு படங்கள் வெளியாக உள்ளது. இதில் அஜித்துடன் ஒப்பிடும்போது விஜய் தான் நம்பர் ஒன் என்று சில வாரங்களுக்கு முன்பு வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியிருந்தார். தற்போது இதற்கு பதிலடி கொடுத்துள்ள துணிவு தயாரிப்பாளர் போனி கபூர், என்னை பொறுத்தவரை எப்போதும் கண்டெண்ட் தான் நம்பர் ஒன். பொன்னியின் செல்வன், லவ்டுடே போன்ற படங்கள் ஏன் நல்ல வசூல் பெறுகிறது. ஹிரோக்கள் கால்பந்தில் செண்டர் பார்வோடு போன்றவர்கள். அவர்களுக்கு சரியான பாஸ் கிடைத்தால் கோல் அடிப்பார்கள் அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.
வாரிசு படத்தை பார்த்து கண்ணீர்விட்ட பிரபலம்
விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள படம் வாரிசு. ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தை பார்த்த நடிகர் ராம்சரன் படம் நன்றாக இருக்கிறது என்று கூறியிருந்தார். தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் தமன், விஜய் அண்ணா எமோஷனல் சீனை பார்த்து இதயப்பூர்மாக அழுதேன் கண்ணீர் விலைமதிப்பில்லாதது என்று கூறியுள்ளார். வாரிசு படத்திற்கு இசையமைத்தது தமன் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பானியில் ஆஃபரை நிராகரித்த சூப்பர் ஸ்டார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தனது சினிமா வாழ்வின் தொடக்கத்தில் சில விளம்பரங்களில் நடித்திருந்தாலும், தற்போது விளம்பரங்களில் நடிப்பதில்லை. இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு உலக பணக்காரர்களில் ஒருவரான அம்பானி தனது நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க ரஜினாகாந்தை அனுகி பலகோடி சம்பளம் பேசியதாகவும், ஆனால் ரஜினிகாந்த் இந்த ஆஃபரை மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஃபரீ புக்கிங்கில் யார் முன்னிலை?
பொங்கல் தினத்தை குறிவைத்து விஜய் நடித்த வாரிசு அஜித் நடித்த துணிவு ஆகிய இரண்டு படங்களும் நாளை வெளியாக உள்ள நிலையில், இந்த படங்களின் ஃப்ரீ புக்கிங் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில், துணிவு படம் 10 லட்சம் ஃப்ரி புக்கிங்கும், வாரிசு படம் 9 லட்சம் ஃப்ரீ புக்கிங் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil