Advertisment

'சும்மா கதை விடாதீங்க கணேஷ்'... இத்தாலி கொலோசியத்தில் சிம்பு ரகளை; பழைய வீடியோ வைரல்!

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் படப்பிடிப்பின்போது இத்தாலி கோட்டையில் சிம்பு விடிவி கணேஷ் செய்த ரகளை தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Simbu VTV Ganesh

சிம்பு – விடிவி கணேஷ் நடிப்பில் பல படங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், தற்போது விடிவி கணேசஷ் முழுநேர காமெடி நடிகராக மாறியிருக்கிறார். இதனிடையே தற்போது சிம்பு நடிப்பில் வெளியான ஒரு மெகஹிட் படத்தின் படப்பிடிப்பின்போது சிம்பு – விடிவி கணேஷ் ஜாலியாக எடுத்த வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக உயர்ந்து இருப்பவர் சிம்பு. பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், தனது சினிமா வாழ்க்கையில், மறக்க முடியாத பல படங்களை கொடுத்திருந்தாலும், சிம்பு ரசிகர்களுக்கு அவரது நடிப்பில் வெளியான முக்கிய படமாக இருப்பது விண்ணைத்தாண்டி வருவாயா.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு த்ரிஷா நடிப்பில் வெளியான இந்த படம் காதல் தோல்வியில் தவித்த பல இளைஞர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்திருந்தனர். இந்த படத்தின் மூலம் காமெடி நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கணேஷ். இந்த படத்திற்கு பின் விடிவி கணேஷ் என்று அழைக்கப்படும் இவர், தற்போது ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படம் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நிலையில், 14 வருடங்கள் கடந்திருந்தாலும், இன்றும் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல் அவ்வப்போது இந்த படத்தின் பாடல்கள், படத்தின் முக்கியமான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி சிம்பு ரசிகர்கள் மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம்.

விண்ணைத்தாண்டி வருவாயா படம் பெரிய வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள். குறிபபாக ஹொசானா பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல்காட்சி இத்தாலியில் படமாக்கப்பட்டபோது, விடிவி கணேஷ் ஒரு அரண்மனையில் உள்ள கல்லில் படுத்துக்கொண்டு இருக்க, சிம்பு அவரிடம், என்ன பண்றீங்க என்று கேட்க, இல்ல யோசித்து பார்க்கிறேன். அந்த காலத்தில் இந்த மாதிரி படுத்துட்டு ஜாலியா இருப்பாங்க. இதை கேட்டு, சிரிக்கும் சிம்பு நீங்களா எதாவது கதை விடாதீங்க கணேஷ். இல்ல இல்ல இந்த ஜன்னல் எல்லாம பாத்தியா எல்லா ஜன்னல் பக்கத்திலும் ஒரு ஒரு ராணிங்க நிப்பாங்க என்று கணேஷ் சொல்ல, அதை கேட்ட சிம்பு யாரோட ராணி என்று கேட்கிறார்.

சண்டையில் ஜெயிக்கும் ராணிக்கு நைட் பார்ட்டி, என்று சொல்ல, ஏதாவது உளராதீங்க கணேஷ், கைடு கைக்கிறேன்னு ஒரு ஆள் சொன்னான் அவனை வேண்டானு சொல்லிட்டு, என்று சிம்பு சொல்ல, அவன் இத்தாலியில் சொன்னதை தான் நான் உனக்கு டிரான்ஸ்லேட் பண்ணி சொல்கிறேன் என்று விடிவி கணேஷ் சொல்கிறார். இதை கேட்ட சிம்பு, இத்தாலியில் ரெண்டு வார்த்தை பேசுங்க, பார்மஸிக்கு இத்தாலியில் என்ன? என்று சிம்பு கேட்க, நான் 3-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை இத்தாலியில் படித்தேன் என்று கணேஷ் சொல்ல, சிம்பு சிரித்துவிடுகிறார்.

இத்தாலியில் அழகு எல்லாம் பார்க்க மாட்டார்கள் நல்ல வீரனா என்று தான் பார்ப்பார்கள் என்று சொல்ல, அதற்கு சிம்பு உங்களை எல்லாரும் அசிங்கமா பார்க்கிறாங்க கணேஷ் என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் இந்த காமெடி கலாட்டா காட்சிகள் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Simbu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment