“வெந்து தண்ணிதது காடு” படத்தின் வெற்றி படத்திற்கு பிறகு சிம்புவின் பத்து தல” படம் இன்று வெளியாகியிருக்கிறது. படம் ரசிகர்களை கவர்ந்ததா? என்பதை பார்ப்போம்.
கதை :
தமிழகத்தில் எந்த கட்சிக்கு ஆட்சிக்கு வர வேண்டும்?யார் முதலமைச்சராக வேண்டும்? என்பதை தீர்மானிக்கும் ஒரு மணல் கொள்ளை ராஜாவாக இருக்கிறார் ஏ.ஜி.ஆர்(சிம்பு). இந்நிலையில் திடீரென முதலமைச்சர் கடத்தப்படுகிறார், அவரை கண்டுபிடிக்க சிபிஐ களம் காணுகிறது, மேலும் அடுத்த முதலமைச்சர் ஆக ஏ.ஜி.ஆரின் விசுவாசியான ஒருவர் நியமிக்கப்படுகிறார்.
இதனால் துணை முதல்வரான கௌதம் மேனனுக்கு சிம்புவவிற்க்கும் பகை ஏற்படுகிறது. இதில் போலீசின் சீக்ரெட் ஏஜென்டான கௌதம் கார்த்திக் சிம்புவின் கோட்டைக்குள் அவரது அடியாளாகவே நுழைந்து அவர் செய்யும் குற்றங்களை கண்காணிக்கிறார். இறுதியில் சிம்பு யார்? ஏ.ஜி.ஆர் போலீஸிடம் சிக்கினாரா? தப்பினாரா? என்பதே கதை.
நடிகர்களின் நடிப்பு
ஹீரோவாக சிம்பு இருக்கிறார் என்பதை விட, ஒரு நீண்ட கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய உடல் மொழியும், முகபாவனைகளும், கம்பீரமான நடையும் ஒரு தாதாவிற்கான அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளதாக அமைந்திருக்கிறது. மேலும் அவரது ஆக்சன், நடனம், சென்டிமென்ட் அனைத்துமே ரசிக்கும் படியாக அமைந்திருக்கிறது. சிம்பு இந்த படத்திற்காக எவ்வளவு உழைத்திருக்கிறார் என்பது அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் நமக்கு புலப்படுகிறது.
கௌதம் காத்திருக்கு ஒரு சிறந்த கதாபாத்திரம் இப்படத்தில் அமைந்திருக்கிறது. அதை அவர் கச்சிதமாக செய்திருக்கிறார். அடியாளுக்கான அத்தனை பொருத்தமும் அவரிடம் இருப்பது திரையில் அவரை மேலும் ரசிக்க உதவுகிறது. மேலும் பிரியா பவானி சங்கர், ரெடீன் கிங்ஸ்லீ, கௌதம் மேனன் மற்றும் இப்படத்தில் நடித்துள்ள அனைத்து துணை நடிகர்களுமே தங்களுக்குரிய ரோலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயக்கம் மற்றும் இசை;
“சில்லுனு ஒரு காதல்” எனும் வெற்றி படத்தை கொடுத்த “ஒபிலி கிருஷ்ணா”, பல வருடங்களுக்குப் பிறகு ஒரு மாஸ் ஆக்சன் கதையை, சில பல திருப்பங்களும், மாஸான காட்சிகளும், சிறிது பரபரப்பான திரைக்கதையுடன் சேர்த்து படமாக நமக்கு கொடுத்திருக்கிறார். இசைப்புயலின் இசை இப்படத்தின் காட்சிகளை பல மடங்கு உயர்த்தவும், ரசிக்கவும் உதவியிருக்கிறது. மேலும் பாடல்கள் அனைத்துமே படத்தின் கதை களத்திற்கேற்ப அற்புதமாக அமைந்திருக்கிறது.
பாஸிட்டிவ்ஸ்:
*நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்புவின் மாஸான காட்சிகள் ரசிகர்களை குதூகலப்படுத்துகிறது.
*கௌதம் கார்த்திக்கின் எதார்த்த நடிப்பு – சிறப்பு.
*படத்தின் காட்சி அமைப்புகளும்,
பாடல்களும் பிரமாதம்.
*துணை நடிகர்களின் சிறப்பான நடிப்பு கதைக்களத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது.
நெகடிவ்ஸ்:
*ஒரு மணல் கடத்தல் தாதா எப்படி முதலமைச்சரை அசால்டாக கொல்ல முடியும்,முதலிய சில பல லாஜிக் குறைகள் உள்ளது.
*படத்தின் இடைவேளைக்கு சிறிது முன்பு தான், சிம்புவே திரையில் காட்டப்படுகிறார் என்பது ரசிகர்களின் மிகப்பெரிய சோகம்.
மொத்தத்தில் சில பல குறைபாடுகள் இருந்தாலும், ஒரு நல்ல மாஸ் கமர்சியல் படத்தை பார்த்த திருப்திஅளிக்கிறது.
OVERALL – A Nice Mass Commercial Entertainer.
நவீன் குமார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil