scorecardresearch

ரஜினிக்கு பிரேமம் இயக்குனர் வேண்டுகோள்… கமல் படத்திற்காக சிம்புவின் செயல் : டாப் 5 சினிமா

நேரம், பிரேமம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் தற்போது நடிகர் ரஜினிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

ரஜினிக்கு பிரேமம் இயக்குனர் வேண்டுகோள்… கமல் படத்திற்காக சிம்புவின் செயல் : டாப் 5 சினிமா

லோகேஷ் கனகராஜ் படத்தில் நயன்தாரா

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தற்போது நயன்தாரா புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளதாகவும், இந்த படத்தை ரத்னகுமார் இயக்க உள்ளதாகவும், லோகேஷ் கனகராஜ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கமலுக்காக சிம்பு செய்த செயல்

வெந்து தணிந்தது காடு படத்திற்கு பத்து தல படத்தில் நடித்துள்ள சிம்பு அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், கமல் படத்திற்காக சிம்பு தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கன வெந்து தணிந்தது காடு படத்திற்காக அவர் 40 கோடி சம்பளம் வாங்கியதாகவும் தற்போது அதில் இருந்து குறைத்துக்கொண்டதாகவும் தகவல் வளெியாகியுள்ளது.

வரலட்சுமி பகிர்ந்த உண்மை

தமிழ் தெலுங்கில் தற்போது முக்கிய கேரக்டரில் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, ஒருவர் என் வீட்டிற்கு வந்து ஷோ குறித்து பேசினார். அதன்பிறகு மற்ற விஷயங்களை நாம் ஹோட்டலில் பேசிக்கொள்வோம் என்று சொன்னார். நான் உடனடியாக இங்கிருந்து போய்விடுங்கள் என்று சொன்னேன். என் பெற்றோர் சினிமாவில் முக்கியமான இடத்தில் இருக்கும் நிலையில் எனக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்கள் எப்படி இருக்க முடியும் என்று கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் புதிய படம்

தற்போது மாவீரன் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்து ஏ,ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூதாய பிரச்சனையை முன்னிறுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவுமு் தகவல் வெளியாகி வருகிறது.

ரஜினிக்கு பிரேமம் இயக்குனர் வேண்டுகோள்

நேரம், பிரேமம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் தற்போது நடிகர் ரஜினிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதில் உங்கள் மனதில் தோன்றுவது எதுவாக இருந்தாலும் அதை வீடியோவாக வெளியிடுங்கள் நீங்கள் எது சொன்னாலும் அதை கேட்டுக்கொள்ள ரசிகர்கள் இருக்கிறார்கள். உங்கள் கருத்துக்கள் வரவேற்பை பெறும் என்று கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema simbu kamal movie and rajinikanth update