தக் லைப் படத்தில் சிம்பு : கமல்ஹாசனுக்கு மகனாக நடிக்கிறாரா?

சமீபத்தில் வெளியான சிம்புவின் தக் லைஃப் ப்ரமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

சமீபத்தில் வெளியான சிம்புவின் தக் லைஃப் ப்ரமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

author-image
WebDesk
New Update
Simbu Thuglife

தக் லைப் ப்ரமோவில் சிம்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைப் படத்தில் சிம்பு இணைந்துள்ள நிலையில், டெல்லியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது வெளியான சிம்புவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு தற்காலிகமாக படத்திற்கு எஸ்.டி.ஆர்48 என்று தலைப்பிடப்பட்டது.

இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ள நிலையில், படத்தின் ப்ரீ புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே சிம்பு தற்போது கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் தக் லைப் படத்தில் முக்கிய கேரக்டரில் இணைந்துள்ளார். சமீபத்தில் வெளியான சிம்புவின் தக் லைஃப் ப்ரமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

தக் லைப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், அங்கிருந்து வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் வெளியான சிம்புவின் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த படத்தில் சிம்பு கமல்ஹாசனின் மகனாக எல்லைப் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

Advertisment
Advertisements

சிம்பு தனது எஸ்.டி.ஆர் 48 படத்திற்காக ஒரு புதிய தோற்றத்தில் இருப்பதால், மணிரத்னத்தின் இயக்கத்தில் அவர் தனது தோற்றத்தை வேறுபடுத்த முடியாது. இதனால் அதே தோற்றத்தில் தக் லைப் படத்திலும் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் இதன் மூலம் சிம்பு குறுகிய காலத்தில் நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக சிலம்பரசன் கூறியது போல், சுவாரஸ்யமான தகவல் ஒன்று பரவி வருகிறது.

'தக் லைஃப்' ஒரு குறிப்பிட்ட கால கேங்க்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக இருக்கும். த்ரிஷா, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 'தக் லைஃப்' படத்தின் சமீபத்திய ஷெட்யூல் டெல்லியில் நடந்து வருகிறது, இது ஒரு வாரத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Silambarasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: