சிம்பு காட்டில் பட மழை! – மீண்டும் ஹரியுடன் இணைகிறார்!

Simbu’s next with director Hari: இவர் நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் படபிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. 

simbu, maanaadu, director hari
simbu-1

Simbu’s next with director Hari: ’செக்க சிவந்த வானம்’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் பிஸியான நடிகராகிவிட்டர் சிம்பு.

அதன் பிறகு ‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இயக்குநர் சுந்தர்.சி-யின் இயக்கத்தில் சிம்பு நடித்த, ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ படம் கடந்த பொங்கலுக்கு வெளியானது.

இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் இவர் நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் படபிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

இதற்காக லண்டன் சென்று உடல் எடையைக் குறைத்து ’சிக்’கென சென்னை திரும்பியிருக்கிறார் சிம்பு.

தவிர, வில்லன், குணச்சித்திரம் என கலந்துக்கட்டிய நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இது தவிர இன்னும் சில படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இயக்குநர் ஹரியும் சிம்புவும் மீண்டும் இணையப் போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான ‘கோவில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆகையால், இவர்கள் அடுத்ததாக இணையும் படத்திற்கு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகள்!

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema simbus next with director hari

Exit mobile version