சிவாஜி படத்தில் ஒரு பாடல் பாடிய பாடகி பி.சுசீலா, முதல்முறையே சரியாக பாடியிருந்தாலும், அதன்பிறகு அந்த பாடலுக்காக 20 முறை திரும்ப திரும்ப பாடியுள்ளார். இதற்கு காரணம் என்ன என்பது குறித்து அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Advertisment
1957-ம் ஆண்டு பி.ஆர்,பந்தலு இயக்கத்தில் வெளியான படம் தங்கமலை ரகசியம். சின்ன அண்ணாமலை கதை எழுத, பி.நீலகண்டன் வசனம் எழுதிய இந்த படத்தில், சிவாஜி கணேசன், டி.ஆர்.ராஜகுமாரி, ஜமுனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டி.ஜி. லிங்கப்பா இந்த படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில், கு.ம பாலசுப்பிரமணியன், கு.ச.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.
இந்த படத்தில் வரும் அமுதை பொழியும் நிலவே என்ற பாடலை பி.சுசீலா பாடியிருந்தார். இந்த பாடலை, படத்தில் ஜமுனா பாட வேண்டும். அவருக்கு தெரியாமல் ஜன்னல் வழியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பார்க்க வேண்டும். இந்த வேளையில் தன்னை யாரும் பார்த்துவிட கூடாது என்பதால், ஆதிவாசி வேடத்தில் சிவாஜி வந்திருப்பார். ஆனால், அவரை பார்த்துவிட்ட வேலைக்கார பெண், தன் கையில் இருந்த தட்டை கீழே போட்டுவிட்டு கத்திவிடுவார்.
இந்த பாடல் பதிவின்போது, பி.சுசீலா முதல்முறையே சரியாக பாடியிருந்தாலும், வேலைக்கார பெண் கத்துவது போன்று குரல் கொடுப்பவர் சரியாக செய்யாமல் சொதப்பியுள்ளார். இதன் காரணமாக முதல்முறையே சரியாக பாடிய பி.சுசீலா, அவர் செய்த தவறால், இவர் மீண்டும் பாட வேண்டிய நிலை உருவானது. இப்படியே பி.சுசீலா 20 முறை மீண்டும் மீண்டும் இந்த பாடலை பாடியுள்ளார். அதன்பிறகே அந்த பெண் சரியாக கத்த பாடல் பதிவு முடிந்துள்ளது.
இது குறித்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் பேசிய பி.சுசீலா, இப்போது நினைத்தாலும் வேடிக்கையாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்த பாடல் அப்போது பெரிய வரவேற்பை பெற்றிருந்து குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil