scorecardresearch

பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் 2-வது திருமணம் : ஓ, அந்த தனுஷ் பட நடிகரா இவர்?

Tamil Cinema Update : அலைப்பாயுதே படத்தில் அறிமுகமான கார்த்திக்குமார், பொய் சொல்ல போறோம், தெய்வ திருமகள், யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்

பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் 2-வது திருமணம் : ஓ, அந்த தனுஷ் பட நடிகரா இவர்?

Tamil Cinema Actor Karthik Kumar Weds Actress Amrutha Srineevasan : பாடகி சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் இளம் நடிகை அமிர்தா சீனிவாசனை 2-வது திருமணம் செய்துகொண்டார். நெருங்கி உறவினர்கள் மட்டும் கலந்துகொண்ட இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆர்ஜேவாக மக்கள் மத்தியில் பிரபலமாக சுசித்ரா தொடர்ந்து பாடகி, நடிகை என் பன்முக திறமையாளாராக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். ஜேஜே, ஆயுத எழுத்து, பலே பாண்டியா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தள்ள அவர், திருட்டுப்பயலே, மங்காத்த உள்ளிட்ட பல படங்களில் நாயகிகளுக்கு குரல் கொடுத்துள்ளார். மேலும் பல படங்களில் தனது இனிமையான குரலில் பாடல்கள் பாடியுள்ளார்.

இந்நிலையில், சுசித்ரா நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்டார். அலைப்பாயுதே படத்தின் மூலம் அறிமுகமான கார்த்திக்குமார், தொடர்ந்து பொய் சொல்ல போறோம், தெய்வ திருமகள், வெப்பம், யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ஸ்டேண்டப் காமெடியனாக இருக்கும் அவர், ஏராமான மேடை ஷோக்களை நடத்தி வருகிறார். மகிழ்ச்சியாக சுசித்ராவின் வாழ்க்கை 2017-ம் ஆண்டு திசை திரும்பியது.

அவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் வெளியாகி தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தனது ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று அவர் விளக்கம் அளித்திருந்தார். அன்றுமுதல் சுசித்ராவின் சினிமா வாழ்க்கை சரியத்தொடங்கிய நிலையில், அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது கணவர் கார்த்திக் குமார் கூறியிருந்தார்.

இதன்பிறகு வொல்ட் கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுசித்ரா பாலாஜிக்கு ஆதரவாக நடந்துகொண்டதால் விரைவில் வெளியேற்றப்பட்டார். இதற்கு முன்பே கார்த்திக் குமார் சுசித்ராவை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டே சுசித்ராவிடம் இருந்து முறையாக விவாகரத்து பெற்றார். இந்நிலையில், தற்போது கார்த்தி்க் குமார் இளம் நடிகை ஒருவரை 2-வது திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேயாத மான், தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அமிர்தா சீனிவாசனை கார்த்திக் குமார் 2-வது திருமணம் செய்தகொண்டார். சென்னையில் நடைபெற்ற இந்த திருமணவிழாவில் முக்கிய நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை வினோதிநி தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். நடிகர் நடிகைகள் பலரும் திருமண தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema singar suchitra ex husband karthik kumar married actress amrutha