பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், இந்த படத்தில் ஒரு பாடலை பாட பிரபல பாடகி 6 மணி நேரம் எடுத்துக்கொண்டார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான 'சந்திரமுகி' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, நாசர், வடிவேலு உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்திருந்தனர். சந்திரமுகி படம்’ சென்னை சாந்தி திரையரங்கில் 801 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
வித்யாசாகர் இசையமைத்த இந்த படத்தில், வரும் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. அந்த வகையிலான ஒரு பாடல் தான் கொஞ்ச நேரம் கொஞ்சம் நேரம் என்ற பாடல். கவிஞர் யுகபாரதி எழுதிய இந்த பாடலை பார்த்த இயக்குனர் பி.வாசு, பாடல் சூப்பராக இருக்கிறது. ரஜினியினி அழகை பற்றி 2 வரிகளி எழுதுங்களேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட யுகபாரதி தாரளமாக எழுதலாமே என்று கூறி 2 வரிகள் எழுதியுள்ளார்.
அந்த வரிகள் தான், கண்ணில் ஓரழகு, கையில் ஓரழகு, உன்னால் பூமி அழகே என்று எழுதியுள்ளார். இந்த பாடலை பாட, பாலிவுட் பாடகி, ஆஷா போஸ்லே வந்துள்ளார், பாடலை பாடிய அவருக்கு அழகு என்ற வார்த்தையில் ழகரம் உச்சரிப்பு சரியாக வரவில்லை. இதனால் பாடல் பதிவு தாமதமாகியுள்ளது. அப்போது வித்தயாசாகரிடம், என்ன சார் கொஞ்ச நேரம் என்ற பாடல் பதிவு ரொம்ப நேரமா போய்க்கிட்டே இருக்கே என்று கேட்ட யுகபாரதி, ஆஷா போஸ்லேவிடம் சென்று வார்த்தையை மாற்றி தருவதாக கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
வார்த்தையை மாற்ற ஒப்புக்கொள்ளாத ஆஷா போஸ்லே ஆசிரியர் ஒரு பாடலை எழுதிவிட்டால், அதை திருத்தும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை என்று கூறி அந்த பாடலை சரியாக உச்சரித்து பாடியே தீருவேன் என்று கூறி பாடி முடித்துள்ளார், இந்த பாடல் சுமார் 6 மணி நேரம் பதிவு செய்யப்பட்டதாக கவிஞர் யுகபாரதி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.