Advertisment
Presenting Partner
Desktop GIF

'மனிதனாக தோற்றுவிட்டீர்கள்'... பாடகி சின்மயி வீடியோவுக்கு நெட்டிசன்கள் விமர்சனம்; என்ன நடந்தது?

தனது மகள் கட்டிப்பிடிக்கவில்லை என்று பாடகி சின்மயி வெளியிட்ட வீடியோவுக்கு நீங்கள் ஒரு மதனிதாக தோற்றுவிட்டீர்கள் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Rahul ravindran Chinmayi

சின்மயி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன்

தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி சின்மயிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்த நிலையில், தற்போது குழந்தைகள் தனது கணவர் ராகுல் ரவீந்தரிடம் அன்பாக செல்லவில்லை என்பதை குறிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ள சின்மயி, ஒரு மனிதனாக தோற்றுவிட்டீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் பாடகர் டப்பிங் கலைஞர் என்று அறியப்படும் பாடகி சின்மயி, சன் டிவியின் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின் செய்த சின்மயி அதன்பிறகு தமிழ் சினிமாவில் பாடகியாக வாய்ப்பு பெற்றார். கடந்த 2002-ம் ஆண்டு வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலம் பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து, தமிழில் பல பாடல்களை பாடியுள்ள சின்மயி தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஜிவி பிரகாஷ் டி.இமான், தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், என பலரின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். தமிழில் சூர்யா ஜோதிகா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகாவுக்கு குரல் கொடுத்து டப்பிங் கலைஞராகவும் தன்னை நிரூபித்தவர் சின்மயி.

தொடர்ந்து திரிஷா சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா  போன்ற முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்த இவர், கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் ராகுல் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த சின்மயிக்கு கடந்த ஆண்டு இவருக்கு ஒரு பெண் ஒரு ஆண் என இரட்டை குழந்தை பிறந்தது. சில மாதங்களுக்கு பிறகு சின்மயி தனது குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சின்மயி அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில், சின்மயி கணவர் ராகுல் தனது பெண் குழந்தைனிடம் கட்டிப்பிடிக்க சொல்ல, அந்த குழந்தையோ கட்டிப்பிடிக்க மறுத்துள்ளது. இதனால் தான் குழந்தையை கட்டாயப்படுத்தவில்லை என்று சின்மயி தனது வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவியது. 

இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது விமர்சனங்களையும் கருத்துக்களையும் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இது குறித்து சின்மயி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, எக்ஸ் தளத்தில் ஒருவர், சரி இதுவே அங்க 2 வயது பெண் குழந்தைக்கு பதிலா ஆண் குழந்தை இருந்து அம்மா கட்டியணைக்க வரும்பொழுது ஆவேசமா வேணாம் என்று சொன்னால் அதுக்கும் இதே கருத்தை சொல்வீங்களா என்று கேட்டிருந்தார். 

இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள சின்மயி, "என் மகள் என்னுடன் கட்டிப்பிடிக்க விரும்பவில்லை என்றால், அவளையும் அவளுடைய இரட்டை சகோதரனையும் பெற்றெடுத்த அவளுடைய தாய் என்ற அடிப்படையில், அவள் ஒரு நிலைக்குத் தயாராகும் வரை நான் அவளை அப்படியே விட்டுவிடுவேன். நான் விரும்புவதால் என்னை கட்டிப்பிடிக்க நான் அவளை கட்டாயப்படுத்தப் போவதில்லை. என் மகனுக்கும் இது பொருந்தும். 

நீங்கள் அதைப் பெறவில்லை என்றால், உங்களுக்கு சம்மதம் புரியாது. நீங்கள் விரும்பும் போது நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்ய நீங்கள் ஒருபோதும் மக்களையும் குழந்தைகளையும் கட்டாயப்படுத்த மாட்டீர்கள். மொழிகள் முழுவதும் சம்மதம் என்ற கருத்து பலரிடம் இல்லாமல் போய்விட்டது. பலவீனமான ஈகோகளுக்கு பதில் சொல்ல முடியாது என்று பதிவிட்டுள்ளார். சின்மயின் இந்த கருத்தை பதிவிட்டு பலரும் தங்களது விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். 

இது குறித்து நெட்டிசன் ஒருவர், "உங்கள் குழந்தைகள் உங்களிடமிருந்து பாதுகாப்பற்றவர்களாக உணர்ந்தால் நீங்கள் ஒரு மனிதனாக தோற்றுவிட்டீர்கள், எப்படியும் அவர்கள் மிகவும் அப்பாவியாக இருக்கிறார்கள். குழந்தைகள் நிச்சயமாக அந்நியர்களிடம் எச்சரிக்கையாக இருக்க கற்றுக் கொடுக்கப்படுகிறார்கள், ஆனால் அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர் சொந்த பெற்றோர் என்றால் நீங்கள் ஒரு மனிதனாக தோற்றுவிட்டீர்கள் என்று கூறியுள்ளார். 

இதற்கு பதில் அளித்துள்ள சின்மயி, "என் கணவர் அவளது சுயாட்சியை மதிக்கிறார். எல்லாவற்றையும் விட பைத்தியக்காரத்தனமான ஆண்கள் இங்கு அதிகம் இருக்கிறார்கள் என்பதை எந்த விவேகமுள்ள மனிதனும் புரிந்துகொள்வார். ஆம், உங்கள் குழந்தையின் சம்மதம் எப்படி இருக்கும் என்பதை என்னால் பார்க்க முடிகிறது. உன்னைப் போன்றவர்கள் மனிதர்களை அதிகம் நம்ப மாட்டார்கள் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும், மற்றவர்களைக் குறை கூறுவதற்கு முன்பு நீங்கள் உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லோரும் கெட்டவர்கள் அல்ல, நான் பார்க்கிறபடி, இது சோம்பேறி காளையின் முன் கொம்பு ஊதுவது போன்றது என்று பதிலடி கொடுத்துள்ளார். 

இந்த விவகாரம் எக்ஸ் பக்கத்தில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ள நிலையில், ஒரு சிலர் சின்மயி கருத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், சமூகவலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chinmayi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment