Advertisment

'உடல் நிலையால் ஷூட்டிங் ரத்தான போது சம்பளத்தை குறைத்தவர் சமந்தா': பிரபல பாடகி பெருமிதம்

தன்னை ஆன்லைனில் கடுமையாக விமர்சித்தவர்களை கூட சமந்தா எவ்வித எதிர் கருத்தும் சொல்லாமல் கருணை காட்டியவர் என்று பாடகி சின்மயி கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Samantha

சமந்தா - சின்மயி

சமீபத்தில் வெளியான குஷி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், சந்தோஷத்தில் இருக்கும் சமந்தா குறித்து பாடகி சின்மயி வெளியிட்டுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சிவ நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா சமந்தா இணைந்து நடித்துள்ள படம் குஷி. காதல் ரெமான்ஸ் படமாக வெளியான இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் வெற்றியால் ரசிகர்கள் தன் மீது பொழிந்த அன்பு மற்றும் அபிமானத்தின் அரவணைப்பில் சமந்தா மூழ்கி வருகிறார்.

சமீபத்தில் வெளியான சமந்தாவின் சகுந்தலம் உள்ளிட்ட சில படங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிய நிலையில், குஷி படம் சமந்தாவுக்கு முக்கியமான படமாக இருந்தது. இதனிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான குஷி திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் ரூ.70.23 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் குவித்துள்ளது. இதனால் சமந்தா மிக்க மகிழ்ச்சியில் உள்ளார்.

இதனிடையே பாடகி சின்மயி ஸ்ரீபாதா சமீபத்தில் சமந்தா ரூத் பிரபு மீது தனது ஆழ்ந்த அபிமானத்தையும் பாராட்டுகளையும் வெளிப்படுத்தினார், இது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ள சின்மயி தன்னை பற்றி  ஆன்லைனில் அவதூறு கருத்துக்களை பரப்பியவர்கள் மீத கூட சமந்தா குறிப்பிடத்தக்க கருணையை எடுத்துக்காட்டினார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், சின்மயி "சமந்தாவை ஒரு உத்வேகமாக கருதுங்கள்" என்று ஒவ்வொரு பத்தியின் சொற்றொடருடன் முடித்துள்ளார். மேலும் சமந்தாவின் வெற்றிகரமான பயணத்தை விவரித்த அவர், உடல்நல பிரச்சனைகளை சமாளிப்பதில் அவருக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்தும் பேசியுள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக தனது படங்களின் படப்பிடிப்பு தாமதமானபோது நடிகர் சம்பளத்தை குறைக்க ஒப்புக்கொண்டதைக் குறிப்பிட்ட சின்மயி, சமந்தா எப்போதும் தனது தொழில், பணியின் தரம், நேர்மை, ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாக கூறியுள்ள சின்மயி, அவரது வாழ்க்கை முடிந்துவிட்டது என்று பலர் கூறியிருந்தாலும், அவர் தற்போது வெற்றியின் புதிய நிலைகளை எட்டியுள்ளார். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் இரண்டிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

பதினைந்து நாட்களுக்கு முன்பு, சமந்தா ரூத் பிரபுவுடன் குஷியின் விளம்பரங்களில் பங்கேற்றபோது, ​​சின்மயி ஸ்ரீபாதா அவரை தைரியமானவர் மற்றும் "உலகின் அழகான பெண்" "பல பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு நீங்கள் ஒரு ஹீரோ" என்று சின்மயி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Samantha Ruth Prabhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment