மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வரும் நடிகை சமந்தா, சமீப காலமாக நாம் மாற்று மருத்துவத்தை கடைபிடிக்கலாம் என்று கூறி தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சிரியாக் அபி பிலிப்ஸ் சமந்தா செய்தது மன்னிக்க முடியாத குற்றம் அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த சமந்தா தற்போது இந்தி படங்களில் நடிக்க தொடங்கிய நிலையில், ஓரிரு ஆண்டுகளாக அவர் தனது மயோசிடிஸ் நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது தனது சிகிச்சை தொடர்பான பதிவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்த சமந்தா, சமீப காலமாக நாம் மாற்று மருத்துவத்தை கடைபிடிக்க வேண்டும் என்று தனது ரசிகர்களிடம் கூறி வருகிறார்.
சமந்தாவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள லிவர் டாக் என்னும் ட்விட்டர் பயனாளரும், ஹெல்த் இன்ஃப்ளூசியருமான சிரியாக் அபி பிலிப்ஸ் சமந்தா இவ்வாறு செய்வது குற்றம் அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து, 25 வருடங்களாக டி.ஆர்.டி.ஓவில் மருத்துவராக இருந்தவர் தான் இதை என்னிடடம் சொன்னார் வேண்டுமென்றால் அவரிடம் விவாதம் செய்யுங்கள், என்னை ஏன் இப்படி மோசமாக விமர்சிக்கிறீர்கள் என்று 3 பக்கத்திற்கு அறிக்கை விட்டிருந்தார்.
சமந்தாவின் அறிக்கை குறித்து பேசிய டாக்டர் பிலிப்ஸ், அவர் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் சமந்தாவுக்கு ஆதரவாக பாடகி சின்மயின் கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். தனது முதல் படமான மாஸ்கோவின் காவிரி படத்தில் சமந்தாவுடன் ஜோடியாக நடித்திருந்த ராகுல் ரவீந்திரன், அதன்பிறகு சமந்தாவின் நெருங்கிய நண்பராக மாறிவிட்ட நிலையில், தற்போது சமந்தாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
சமந்தா சொல்வது போல் நீங்கள் அந்த மருத்துவரிடம் விவாதிக்கலாமே, மருத்துவ உலகில் ஒரு மருத்துவர் ஒரு விஷயத்தை ஒரு மாதிரியும், இன்னொரு மருத்துவர் அதை வேறு மாதிரியும் சிகிச்சை வழங்கி வரும் சூழல் இருந்து வருகிறது. அங்கேயே குழப்பம் நீடித்து வரும் சுழலில், மருத்துவ அறிவு இல்லாத சாதாரண மக்களைப் போலத்தால் சமந்தாவும் இருக்கிறார். அவரை ஏன் நீங்கள் கடுமையாக விமர்சிக்கிறீர்கள் என்று ராகுல் ரவீந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது கருத்துக்களை கேட்க சுமார் 3.5 கோடி பேர் உள்ளனர். சமந்தாவுக்கு அது செட் ஆகிறது என்பதற்காக தவறான மருத்தை ஏன் மற்றவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும்? என்று டாக்டர் பிலிப்ஸ் ராகுல் ரவீந்திரனிடம் கேள்வி எழுப்பிய நிலையில், நீங்கள் சொல்வது சரிதான் என்று கூறி அமைதியாகிவிட்டார் ராகுல். இந்த விவகாரம் சற்று பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜூவாலா காட்டா கூட டாக்டர் பிலிப்ஸ்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/LoArirrTccFXlvwdw0vk.jpg)
ஹைட்ரோஜன் பெராக்ஸைடை சுவாசிக்க கூடாது என்று டாக்டர் பிலிப்ஸ் தடுத்து வருகிறார். ஆனால் சமந்தா ஹைட்ரோஜன் பெராக்ஸைடை சிக்ச்சைக்கு பயன்படுத்தலாம் என்று கூறி வருகிறார். சமந்தா சொல்வது முற்றிலும் தவறு என்று பல பிரபலங்கள் கூறி வரும் நிலையில், உடல்நிலை சரியில்லை என்றால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தான் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“