/indian-express-tamil/media/media_files/3f05dX6TrbEfT5OAPid4.jpg)
நிவேதா பெத்துராஜ் - சின்மயி
பிரபல நடிகர் ஒருவர் தனக்காக ஆடம்பர செலவு செய்வதாக யூடியூப்பில் வெளியான வீடியோவுக்கு மறுப்பு தெரிவித்து நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் நடிகை நிவேதா பெத்ராஜூவுக்கு ஆதரவாக பாடகி சின்மயி கருத்து தெரிவித்துள்ளார்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகை நிவேதா பெத்துராஜூக்காக வாரிசு அமைச்சர் ஒருவர் ஆடம்பர செலவு செய்வதாக தெரிவித்திருந்தார். இந்த தகவல் இணையத்தில் பெரும் வைரலாக பரவிய நிலையில, இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகை நிவேதா பெத்துராஜ், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார், இந்த பதிவும் வைரலாக பரவிய நிலையில், நிவேதாவுக்கு ஆதரவாக கருத்துக்கள் பரவியது.
அந்த வகையில் பாடகி சின்மயி ஸ்ரீபாதா நிவேதாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சின்மயி, "வரலாறு பெண்களை கேப்ரிசியோஸ் என்றும் ஆண்களை நேர்மையானர்கள் என்றும் அழைக்கிறது. சவுக்கு சங்கர் போன்ற செல்வாக்கு உள்ளவர்கள், அரசியல் நாடகத்திற்கு சம்பந்தமே இல்லாத பெண்களை தேவையில்லாமல் இழுக்காமல், நேற்று விரும்பிய, இன்று எதிர்த்த, நாளை மீண்டும் விரும்பும் அரசியல் தலைவர்களை பற்றி பேசலாம். அவர்கள் இதுபோன்று கூறுவதால் ஆண்கள் எதையும் இழக்கவில்லை. தயவு செய்து பெண்களை தனியாக விடுங்கள் என்று கூறியுள்ளார்.
History has called women capricious but in all honesty it is the men that are.
— Chinmayi Sripaada (@Chinmayi) March 5, 2024
People with influence like @SavukkuOfficial can condemn a political leader that they liked yesterday, oppose today and will like again tomorrow if situations and politics so dictate, without…
நேற்று முன்னதாக, நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைப்பின்னல் பக்கத்தில் தவறான செய்தியால் தனது கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தினார். நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி இவருக்காக ஆடம்பரமாக பணம் செலவழித்து வருவதாகவும், துபாயில் உள்ள அவரது வீட்டை 50 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்த நிவேதா பெத்துராஜ், தான் கன்னியமாக வாழ விரும்புவதாகவும், இந்த வதந்திகளினால் தான் மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.