ராஜ் மெலோடிஸ் வழங்கும் முதல் முதலாக எனும் இன்னிசை நிகழ்ச்சி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இன்று மாலை நடைபெற உள்ளது. தமிழ் படங்களில் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா போன்ற இளம் இசைமைப்பாளர்களின் இசையில் பாடல் பாடி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள பிரபலமான பாடகர் கிரிஷ் மற்றும் பாடகர், பாடகிகளுடன் லைவ் இன் கான்செர்ட் ஆக இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Advertisment
இந்த மாபெரும் இசை நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய பாடகர் க்ரிஷ், மலேசியாவில் கடைசியாக கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் ரசிகர்களின் வரவேற்பை கண்டு மனம் நெகிழ்ச்சியடைந்தேன்.
கோவையில் முழுவதும் இசை பிரியர்களுக்காக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நான் பாடிய பாடல்களுடன் பிற பாடகர்கள் பாடிய பாடல்களையும் இந்த கச்சேரியில் பாட உள்ளேன். கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர். கோவையில் நல்ல ரசிகர்களை எதிர்பார்த்து இந்த கச்சேரியை நடத்த உள்ளோம். கோவை ரசிகர்களுக்கு முதல் முதலாக எனும் இந்த நிகழ்ச்சியில் மாபெரும் இன்னிசை விருந்து காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் குறித்து கேள்விக்கு பதில் அளித்த க்ரிஷ், விஜய் தான் எனக்கு எப்போது பெஸ்ட், புதிதாக ஒரு பட்டம் உருவாக்கலாம் எனக்கு விஜயை ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார்
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil