இந்திய சினிமாவின் பின்னணி பாடகியான கே.எஸ்.சித்ரா தனது ஒரே மகள் நந்தனாவின் நினைவு நாளில் வெளியிட்டுள்ள உருக்கமான ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா. 1985-ம் ஆண்டு சிந்து பைரவி படத்தின் இடம்பெற்ற நானொரு சிந்து என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளார்.
இளையராஜா, கங்கை அமரன், சங்கர் கணேஷ், எம்.எஸ்.வி, தேவா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள கே.எஸ்.சித்ரா 6 முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். 1985 தொடங்கி தற்போது வரை முன்னணி பாடகியாக உள்ள கே.எஸ்.சித்ரா விரைவில் வெளியாக பொன்னியின் செல்வன் 2 படத்தில் வீரா என்ற பாடலை பாடியுள்ளார்.
இந்நிலையில்,கே.எஸ்.சித்ரா தனது ஒரே மகளின் நினைவு நாளில் வெளியிட்டுள்ள உருக்கமான ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், எங்கள் இதயங்கள் நினைவுகளால் நிறைந்துள்ளன. உஙகள் பெயரை பெருமையுடன் பேசுகிறோம். நீ்ங்கள் இல்லாமல் வாழ்க்கை சென்றாலும் அது எப்போதும் ஒரே மாதிரி இருக்காது எங்கள் அன்பான நந்தனாவின் அப்பான நினைவாக... என்று பதிவிட்டுள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கே.எஸ்.சித்ராவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் இந்த பதிவுக்கு தங்களது கருத்துக்களால நிரப்பி வருகின்றனர். கே.எஸ்.சித்ராவின் மகள் நந்தனா கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்தில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணமாக சில ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த கே.எஸ் சித்ரா தம்பதிக்கு கடந்த 2002-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நந்தனா என்று பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்த கே.எஸ் சித்ராவுக்கு அவரது வீட்டு நீச்சல் குளமே அவருக்கு சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த 2011-ம் ஆண்டு நந்தனா குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“