/indian-express-tamil/media/media_files/2025/09/08/tamil-cinema-lr-eaw-2025-09-08-21-35-11.jpg)
கண்டதுங்க எல்லாம் பட வந்துட்டாங்க, அந்த ரெட்டை சடை போட்டுக்கே அந்த பொண்ண வெளியில போக சொல்லுங்க, என்று கோரஸ் பாட போன தன்னை வெளியில் அனுப்பிய ஒருவருக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பின்னாளில், முன்னணி பாடகியாக மாறி சபதத்தை நிறைவேற்றியுள்ளார் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி.
1967-ம் ஆண்டு நாகேஷ் நடிப்பில் வெளியான 'அனுபவி ராஜா அனுபவி' என்ற படத்தில் வெளியான 'முத்து குளிக்க வாரீகளா' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக அறியப்பட்டார் எல்.ஆர்.ஈஸ்வரி. தொடர்ந்து ஆயிரம் பொய், பாவ மன்னிப்பு, அவள் ஒரு தொடர்கதை, நான் ஆணையிட்டால் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் பாடல்கள் பாடியுள்ள, இவர், எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் தனது குரலில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
கடைசியாக நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார். தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப்படங்களில் பாடல்கள் பாடியுள்ள, எல்.ஆர்.ஈஸ்வரி, பல அம்மன் பாடல்களை பாடியுள்ளார். இன்றைக்கு ஆடி மாதம் என்றால் பல கோவில்களில் ஒலிப்பது எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய அம்மன் பாடல்கள் தான். அந்த அளவிற்கு தனது குரலில் தனித்தும் பெற்றவர்.
இவர், பாடுவதை விட ஹம்மிங் கொடுத்தாலே அந்த பாடல் ஹிட்டாகிவிடும் என்ற நிலையும் அப்போதைய காலக்கட்டத்தில் இருந்தது. இது குறித்து கவிஞர் வாலி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதனிடையே ஜெயா டிவி நிகழ்ச்சியில் பேசிய எல்.ஆர்.ஈஸ்வரி தான் தான் கோரஸ் பாடும்போது ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பேசியுள்ளார். எனக்கு 6 வயது இருக்கும்போது அப்பா இறந்துவிட்டார், அம்மாவுக்கு பாட்டு மட்டும் தான் தெரியும். மனோகரா படத்தில் பாடல் பாட அவருக்கு வாய்ப்பு வந்தது.
அப்போது அம்மாவுடன் நானும் சென்றிருந்தேன். கோரஸ் பாட அப்போ யாரும் கிடைக்காததால், என் அம்மா என் மகள் நன்றாக பாடுவாள் என்று சொல்லி சான்ஸ் கேட்டார், அப்போது அங்கிருந்தவர் ஒரு பாட்டு பாடு என்று சொல்ல நானும் பாடினேன். உடனடியாக கோரஸ் பாட செலக்ட் செய்துவிட்டார்கள். நான் பாடிய முதல் பாட்டு, இதயம் பாடுதே இன்ப நாளிளே என்ற பாடல் தான். அன்று தொடங்கிய பயணம் 6 வருடங்கள் கோரஸ் பாடினேன். சவுண்ட் எஞ்சினயர் ரங்கசாமி என்பவர் ஒருமுறை நான் கோரஸ் சரியாக பாடவில்லை என்று சொல்லிவிட்டார்.
அதோடு மட்டும் இல்லாமல் இந்த பொண்ணு என்ன பாடுது, ரெட்டை சடை போட்டுக்கே அந்த பொண்ணை வெளியில் போக சொல்லுங்க என்று கூறியுள்ளார். இதனால் அந்த பாடல் முடியும் வரை எல்.ஆர்.ஈஸ்வரி வெளியில் இருக்க பாடல் பாடி முடித்து வெளியில் வந்த அவரது அம்மா அழுதுள்ளார். ஆனால் எல்.ஆர்.ஈஸ்வரி இதே டி.எஸ்.ரங்கசாமி இது நம்ம பொண்ணு, என்று சொல்லும் அளவுக்கு நான் பெரிய பாடகியாக வருவேன் என்று சபதம் எழுத்துள்ளார். அதேபோல் எம்.எஸ்.வி உள்ளிட்ட இசையமைப்பாளர்களிடம் பாடல் பாடி முன்னணி பாடகியாக மாறியுள்ளார்.
அதன்பிறகு, அதே டி.எஸ.ரங்கசாமி பாடல் பதிவு செய்ய எல்.ஆர்.ஈஸ்வரி பாட வந்துள்ளார். ஆனால் ரெக்கார்டிங் இவர் செய்கிறார் என்று தெரிந்துகொண்டு என்னால் பாட முடியாது என்று கூறியுள்ளார். அதன்பிறகு தயாரிப்பாளர் சமாதானம் செய்து பாட வைத்துள்ளனர். பாடல் பதிவாகி முடிந்தவுடன், டி.எஸ்.ரங்கராமி, இது நம்ம பொண்ணுப்பா என்று கூறியுள்ளார். இந்த தகவலை எல்.ஆர்.ஈஸ்வரியே கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.