/indian-express-tamil/media/media_files/2025/09/06/msv-lr-easwari-2025-09-06-12-43-31.jpg)
சிவாஜி படத்தில் இடம்பெற்ற ஒரு பெரிய ஹிட் பாடலை, பி.சுசீலா பாட வேண்டும் என்று இயக்குனர் சொல்ல, சுசீலா பாட வேண்டும் என்றால், இந்த டியூன் நான் தரமாட்டேன். வேற டியூன் போட்டுக்கலாம். இந்த டியூனுக்கு எல்.ஆர்.ஈஸ்வரி தான் பாட வேண்டும் என்று எம்.எஸ்.வி கூறியுள்ளார். அந்த பாடல் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவின் புதுமை இயக்குனர் என்று அழைக்கப்பட்டவர் ஸ்ரீதர். புதுமுக நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், சிவாஜி நடிப்பில் இயக்கிய படங்களில் ஒன்று சிவந்தமண். சிவாஜி, முத்துராமன், நம்பியார், ரங்காராவ், காஞ்சனா, சச்சு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, பாடல்கள் அனைத்தும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். படத்தன் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அந்த வகையில் இந்த படத்தின் பாடல் பதிவின்போது நடைபெற்ற சுவாரஸ்யமாக அனுபவம் குறித்து பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். இந்த படத்தில் முத்தமிடும் நேரம்எப்போ என்ற பாடலை, சாய்பாபாவுடன் சேர்ந்து பாடிய எல்.ஆர்.ஈஸ்வரி, ‘பட்டத்து ராணி பார்க்கும் பார்வை’ என்ற பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி தனியாக பாடியிருந்தார். இந்த பாடல் காலம் பல கடந்தும் இன்றும் நல்ல வரவேற்பை பெற்ற பாடலாக நிலைத்திருக்கிறது.
இந்த பாடலுக்கான டியூன் அமைத்த எம்.எஸ்.வி, பாடல் கம்போசிங்கிற்கு தயாராககும்போது, இந்த பாடலை, பி.சுசீலா பாட வேண்டும் என்று இயக்குனர் ஸ்ரீதர் சொல்ல, அதை கேட்ட எம்.எஸ்.வி தாராளமாக பாடட்டும். ஆனால் இந்த டியூனை நான் தரமாட்டேன். பி.சுசீலா பாட வேண்டும் என்றால் அதற்கு தனியாக டியூன் போட்டு தருகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த பாடலுக்கு தேவையாக எமோஷன் வர வேண்டும் என்றால் அது ஈஸ்வரி பாடினால் மட்டும் தான் வரும். வேறு யார் பாடினாலும் சரியாக வராது என்று கூறியுள்ளார்.
இந்த பாடலை வேறு யார் பாடினாலும் பாட முடியாது. ஈஸ்வரி கிட்ட மட்டும் தான் அந்த திறமை இருக்கிறது. அவளிடம் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியும் என்று சொல்ல, அதன்பிறகு, எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் அந்த பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாட்டுக்கு 150 ஆர்க்கேஸ்டாரா வைத்து பதிவு செய்யப்பட்டது. இதுவரை யாரும் அந்த அளவிற்கு செய்யவில்லை. எங்கே நிம்மதி பாடல் கூட 100 ஆர்க்கேஸ்டாரா தான் வைத்து பதிவு செய்தார்கள் என்று எல்.ஆர்.ஈஸ்வரி தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.