நீ இந்த பாடலை பாடு, உலக ஃபேமஸ் ஆகிடுவ: எம்.எஸ்.வி வார்த்தை பலித்தது: இந்த பாட்டு இல்லாம கல்யாணமே நடக்காது!

நான் ரோமன் கேத்லிக் கிறிஸ்டியன். ஆனால் அம்மன் பாட்டு என்றால் என்னைத்தால் சொல்கிறார்கள். இது அம்மன் எனக்கு கொடுத்த வரம்.

நான் ரோமன் கேத்லிக் கிறிஸ்டியன். ஆனால் அம்மன் பாட்டு என்றால் என்னைத்தால் சொல்கிறார்கள். இது அம்மன் எனக்கு கொடுத்த வரம்.

author-image
WebDesk
New Update
LR Eawsrasi

நனா பிறந்ததே ஒரு பரிசுதான், அதேபோல் கிறிஸ்டியனான என்னை அம்மன் பாட்டுக்கு ஃபேமஸ் ஆக்கியது அம்பாள் எனக்கு கொடுத்த பெருமை என்று பழம்பெரும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisment

1967-ம் ஆண்டு நாகேஷ் நடிப்பில் வெளியான அனுபவி ராஜா அனுபவி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் எல்.ஆர்.ஈஸ்வரி. தொடர்ந்து ஆயிரம் பொய், பாவ மன்னிப்பு, அவள் ஒரு தொடர்கதை, நான் ஆணையிட்டால் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் பாடல்கள் பாடியுள்ள, இவர், எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் தனது குரலில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். கடைசியாக நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார்.

தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப்படங்களில் பாடல்கள் பாடியுள்ள, எல்.ஆர்.ஈஸ்வரி, பல அம்மன் பாடல்களை பாடியுள்ளார். இன்றைக்கு ஆடி மாதம் என்றால் பல கோவில்களில் ஒலிப்பது எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய அம்மன் பாடல்கள் தான். அந்த அளவிற்கு தனது குரலில் தனித்தும் பெற்ற இவர், பாடுவதை விட ஹம்மிங் கொடுத்தாலே அந்த பாடல் ஹிட்டாகிவிடும் என்ற நிலையும் அப்போதைய காலக்கட்டத்தில் இருந்தது. இது குறித்து கவிஞர் வாலி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதனிடையே சமீபத்தில் பிகைண்ட் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு எல்.ஆர்.ஆஸ்வரி அளித்த பேட்டியில், நான் பிறந்ததே ஒரு பரிசுதான். அதை விட, என்னை பாடல் பாட வைத்தது அம்மன் எனக்கு கொடுத்த பரிசு. நான் ரோமன் கேத்லிக் கிறிஸ்டியன். ஆனால் அம்மன் பாட்டு என்றால் என்னைத்தால் சொல்கிறார்கள். இது அம்மன் எனக்கு கொடுத்த வரம். கிறிஸ்டியன் சமுதாயத்தில் பிறந்து, இந்து பாடல்கள் பாடியது குறித்து எனக்கே ஆச்சரியமாக இருந்தாலும், இதுபற்றி யாரும் என்னிடம் கேட்கவில்லை. எல்.ஆர்.ஈஸ்வரி கிடைத்தது பாக்யம் என்று சொல்லிருக்காங்க.

Advertisment
Advertisements

மேரியும் – மாரியுமு் ஒன்னு அதை அறியாதவர்கள் வாயில் மண்ணு. நான் கிறிஸ்டியனாக இருந்துகொண்டு இந்த பாடல் பாடி இருக்கிறேன். ஆனால், மாதா பாடல் பாடினால் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். காலத்தால் அழியாத பாடல், பாசமலர் படத்தில் இடம் பெற்ற வாரயன் தோழி வாராயோ’ பாடல். இதுதான் நான் பாடிய முதல் பாடல். இந்த பாடலை நீ பாடு, உஙகம் முழுவதும் ஃபேமஸ் ஆகிடுவ என்று எம்.எஸ்.வி சொன்னார். அவர் சொன்னது இன்றுவரை நடந்துகொண்டு இருக்கிறது. இந்த மாதிரி பாடல் பண்ண வேண்டும் என்றால் இன்னொருவர் பிறந்து வர வேண்டும் என்று கூறியுள்ளார். 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: