/indian-express-tamil/media/media_files/2025/07/04/singer-minmini-2025-07-04-14-28-07.jpg)
தமிழ் சினிமாவில் ரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை, தளபதி படத்தில் வரும் ராக்கம்மா கையத்தட்டு உள்ளிட்ட எவர் கிரீன் ஹிட் பாடல்களை கொடுத்த பாடகி மின்மினி, இப்போது தனது குரல் வலம் போய் எந்த பாடலையும் பாட முடியாத நிலையில் தான் உள்ளதாக கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.
1992-ம் ஆண்டு பி.சி. ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான மீரா படத்தில் இடம் பெற்ற, ‘லவ்வீனா லவ்வு’ என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் மின்மினி. கேரளாவை சேர்ந்த இவர், பாடகர் ஜெயச்சந்திரன் மூலம் இளையராஜாவை சந்தித்து, மீரா படத்தில் மூலம் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். அதன்பிறகு, ரோஜா படத்தில் சின்ன சின்ன ஆசை, தளபதி படத்தில் ரக்காம்மா கையத்தட்டு, தேவர் மகன் படத்தில் இஞ்சி இடுப்பழகி உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.
பெரும்பாலும் இவர் தமிழில் பாடிய பல பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ள நிலையில், தற்போது மின்மினி எந்த பாடலையும் பாட முடியாத நிலையில் இருப்பதாக கூறியுள்ளார். அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஜெயச்சந்திரன் அவர்கள் மூலமாகத்தான் நான் சென்னை வந்து பாடகி ஆனேன். பாடகி எஸ்.ஜானகி எனக்கு அம்மா மாதிரி, தேவா இசையில் நான் பாடும்போது தான் முதன் முதலில் அவரை சந்தித்தேன்.
எனக்கும் அம்மா அப்பா இல்லை, என் கணவருக்கும் அம்மா இல்லை. எனக்கு எஸ்.ஜானகி தான் அம்மா. அவர் என் வீட்டுக்கு வந்திருக்கிறார். நானும் ஹைதராபாத் சென்று அவரை பலமுறை சந்தித்திருக்கிறேன். தேவர் மகன் படத்தில் இஞ்சி இடுப்பழகி படலில், ரேவதி திக்கி திக்கி பாடுவது மட்டும் தான் என் குரல். மற்ற படி பாடலலை ஜானகி அம்மாதான் பாடினார்கள். அந்த பாட்டுக்கு அவருக்கு தேசிய விருது கிடைத்தது. ஆனால் அதே ஆண்டு என் குரலில் வந்த சின்ன சின்ன ஆசை படலுக்கு தேசிய விருது கிடைதிருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும் என்று அடிக்கடி சொல்வார்.
அவர் இருக்கும்போது நான் பாடகியாக வந்ததே பெரிய விஷயம். ஆனால் அவரை முந்தி செல்வது என்பது முடியாது. நான் இப்போ வாழ்ந்து வருவதற்கு காரணம் என் குரலில் வந்த சின்ன சின்ன ஆசை பாடல் மூலமாகத்தான். எனக்கு மின்மினி என்று பெயர் வைத்தவர் இளையராஜா. அந்த பெயர் உலகம் அறிய செய்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால் யாருக்கு நன்றி சொல்வது என்று தெரியவில்லை. எதுவும் தெரியாத வயதில் நான் பாடிய அந்த பாட்டு, இப்போது நான் உயிருடன் இருக்கவும் காரணமாக இருக்கிறது.
நான் சென்னையில் இருந்தபோது, ஒரு கட்டத்தில் எனது குரல் வலம் போய்விட்டது. ஆனாலும் எனது கணவர் என்னை திருமணம் செய்துகொண்டார். 2-வது குழந்தை பிறந்த பிறகு, எனது பெற்றோர்கள் மரணமடைந்தனர். அதனால் 2004-ம் ஆண்டில் இருந்து நான் கொச்சியில் இருக்கிறேன். மீண்டும் பாட வேண்டும் என்று ஆசை இருந்தாலும் ஸ்டூடியோவிற்கு செல்வதற்கு எனக்கு பயமாக இருந்துது. அதனால் நான் பாடுவதை தவிர்த்துவிட்டேன்.
எனக்கு குரல் வலம் இல்லாமல் இருந்தபோது தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன். ஆனால் என் குடும்பத்திற்கு கெட்ட பெயர் வரும் என்பதால் அந்த முடிவை மாற்றிக்கொண்டேன். இன்றும் என்னை வாழ வைப்பது என் குரலில் வந்த பாடல்கள் தான். குறிப்பாக சின்ன சின்ன ஆசை பாடல் என்று மின்மினி கூறியுள்ளா. தமிழில் பாடல் பாடுவதை நிறுத்தி 20 ஆண்டுகள் ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மின்மனியின் பாடல் பலரின் ப்ளேலிஸ்டில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.