உடல்நிலை பாதித்து வீங்கிய கண்களுடன் எஸ். ஜானகி பாடிய பாட்டு: அது இந்தப் பாட்டு தான் என சொன்னா நம்ப மாட்டீங்க!

தனது கணவருக்கு நெருக்கமான அந்த பாடலை எங்கும் என்றால் பாட முடியாது. இதுவரை எந்த கச்சேரியிரும் பாடவே மாட்டேன் என்று உறுதியாக உருக்கமாக தெரிவித்துள்ளார். இது என்ன பாட்டு தெரியுமா?

தனது கணவருக்கு நெருக்கமான அந்த பாடலை எங்கும் என்றால் பாட முடியாது. இதுவரை எந்த கச்சேரியிரும் பாடவே மாட்டேன் என்று உறுதியாக உருக்கமாக தெரிவித்துள்ளார். இது என்ன பாட்டு தெரியுமா?

author-image
WebDesk
New Update
S Janaki

தமிழ் சினிமாவில் தனது இனிமையாக குரலின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த பாடகி எஸ்.ஜானகி, தனது கணவருக்கு நெருக்கமான இந்த பாட்டை அப்போது நான் பாடினேன். ஆனால் இப்போது அந்த பாடலை எங்கும் என்றால் பாட முடியாது. இதுவரை எந்த கச்சேரியிரும் பாடவே மாட்டேன் என்று உறுதியாக உருக்கமாக தெரிவித்துள்ளார். இது என்ன பாட்டு தெரியுமா?

Advertisment

டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எஸ்.ஜானகி, ஒரு சமயம், எனக்குத் தீவிர சளி பிடித்திருந்தது. என் கணவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். அந்த மருத்துவர், எனக்கு எந்த மருந்து ஒத்துக்கொள்ளும் என்று தெரியாமல், ஆஸ்பிரின் கொடுத்தார். எனக்கு அந்த மருந்து ஒத்துக்கொள்ளாது.

ஒருநாள், ரிக்கார்டிங் செய்யப் போனேன். பாடுவதற்காக மைக் அருகில் செல்வதற்குள், என் கண்கள் எல்லாம் சிவந்து, மூச்சு முற்றிலும் வந்துவிட்டது. மூச்சே வரவில்லை. அப்படியே மூச்சை அடக்கிக்கொண்டேன். ஒரே ஒரு டேக்தான் அந்தப் பாட்டுக்கு. "சரி" என்று முடித்தார்கள். உடனடியாகக் காரில் ஏறி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கேயும் ஊசிகள் போட்டார்கள். ஒரே ஒரு டேக்தான் அந்தப் பாட்டுக்கு, ஆனால் அது முடிந்துவிட்டது. 
அன்று நான் பாடினேன். தானாகவே அந்த டேக் ஓகே ஆகிவிட்டது.

பாடிவிட்டுத்தான் மருத்துவமனைக்குச் சென்றேன். அந்த நிலையில் நான் இன்னொரு டேக் வேண்டும் என்றால் பாடியிருக்க முடியாது. அப்படி எத்தனை சான்ஸ் பாடியிருக்கிறேன் தெரியுமா? மூச்சு திணறலோடு, சுவாசப் பிரச்சினையோடு எத்தனை பாடல்கள் பாடியிருக்கிறேன்."தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே, தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே" என்ற பாடல் தான்
நானும் என் கணவரும் எப்போதும் பக்கத்தில்தான் இருப்போம்.

Advertisment
Advertisements

நான் அவரை விட்டு பிரிந்ததே இல்லை. நான் பாடும்போது, கச்சேரிக்குச் சென்றாலும், ரிக்கார்டிங்கிற்குச் சென்றாலும், அவர் எப்போதும் ரிக்கார்டிங்கிற்கோ, கச்சேரிக்கோ வருவார்ல. அவரைப் பார்க்காதபோது எனக்கு ஏக்கம் வரும். திடீரென அழுகையும் வரும். ஒரு கச்சேரியில் கூட நான் இதுவரை இந்தப் பாடலைப் பாடியதில்லை. வராத கூட்டமெல்லாம் வந்திருந்தது. "நீ ஏன் வரவில்லை?" என்பது போலெல்லாம் அந்தப் பாடலில் வரும். அப்போது எனக்குத் தெரியாமல் இந்தப் பாடலைப் பாடினேன். ஆனால் இப்போது அந்தப் பாடலை என்னால் பாட முடியாது.

அந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் நான் பாடமாட்டேன். ஒரு கச்சேரியில் கூட பாடியதில்லை. எப்போது பாடினாலும் எனக்கு அழுகை வரும். அதனால்தான் பாடக்கூடாது என்று முடிவு செய்தேன். இப்படி சில விஷயங்கள் இருக்கும். எதையும் மறக்க முடியாது. மறந்தால்தானே ஞாபகம் வர வேண்டும்? அவர் எப்போதும் என் மனதில் இருக்கிறார். அவர் எனக்குள்ளே இருக்கிறார். இதுதான் உண்மை என ஜானகி உருக்கமாக தெரிவித்துள்ளார். 

Tamil Cinema News s janaki

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: