/indian-express-tamil/media/media_files/2025/09/11/sathyan-singer-2025-09-11-21-41-55.jpg)
கடந்த சில தினங்களாக இணையத்தில் உலா வரும் ‘ரோஜா ரோஜா பாடலை சிங்கர் சத்யன் பாடும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், தற்போது அவர், தனது திரையுலக அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
2004-ம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படம் தான் சத்யன் சிங்கராக அறிமுகமான முதல் படம். பரத்வாஜ் இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து, அறிந்தும் அறியாமலும், முனி, சரோஜா, அவன் இவன் கழுகு, உள்ளிட்ட பல ஹிட் படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். குறிப்பாக, கழுகு படத்தில் வரும் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும், துப்பாக்கி படத்தில் வரும் குட்டிப்புலி ஆகிய பாடல்கள் இவர் பாடியது தான்.
கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் தீ முகம் இவன் என்ற பாடலை பாடியிருந்த சத்யன், தற்போது, ஆச்சரியங்கள் அன்லிமிட்டேட், துள்ளி எழுந்தது காதல், படம்பார்த்து கதை சொல் உள்ளிட்ட படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இதனிடையே கடந்த சில தினங்களாக இவர், இசை கச்சேரியில், காதலர் தினம் படத்தில் வரும் ரோஜா ரோஜா பாடலை பாடும் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை உண்மையில் பாடியவர் உன்னிக்கிருஷ்ணன். ஆனால் அவரது குரலை அச்ச அசலாக சத்யன் பாடியிருப்பார்.
இது குறித்து விகடன் சேனலில் பேசிய அவர், நான் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிரமான ரசிகன். சிறுவயதில் இருந்தே எனக்கு பாடல்கள் பாடுவது மிகவும் பிடிக்கும், இதற்கு காரணம் என் அம்மா தான். குடும்ப கஷ்டத்தை சொல்லி கோவிலில் கடவுள் முன்பு அம்மா அழுதுகொண்டே பாடுவார். அதை பார்த்து எனக்கு பாட்டு வந்தது, இசை கச்சேரிகளை பார்க்கும்போது என்க்கு மேடையில் பாட வேண்டும் என்று தோன்றியது. அதற்காக பல வாய்ப்புகளை கேட்டு போனேன்.
பாடல் பாட வாய்ப்பு தருவதாக கூறி சேர்த்துக்கொண்டு, பாட வாய்ப்பு கொடுக்காமல், ஸ்பீக்கர் தூக்கவும் மற்ற வேலைகளை செய்யவும் பயன்படுத்தினார்கள். ஒருநாள் ஒருவர் ஒரு பாடலை தவறாக பாடினார். நான் அதை சுட்டிக்காட்டினேன். அப்போது அவர் கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு ஒருநாள் எனக்கு பாட வாய்ப்பு கிடைத்தபோது அவர் தவறு செய்த அதே பாடலை நான் பாடினேன். இதை பார்த்த மற்றொரு இசை கச்சேரி குழு, என்னை அவர்கள் குழுவில் பாட சொன்னார்கள். இப்போதுவரை தொடந்து வருகிறது.
நான் எங்கு கச்சேரிக்கு சென்றாலும், ரோஜா ரோஜா பாடலைத்தான் முதலில் பாடுகிறேன். யுவன் சங்கர் ராஜா இசையில் பல பாடல்கள் பாடியிருக்கிறேன். ஆனால் அவர் நன்றாக இருக்கிறது என்று எதுவும் சொல்ல மாட்டார். இளையராஜா பாடல் பாடுவது குறித்து சொல்லி கொடுப்பார். அது எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு மேலடி பாடல்கள் யாரும் கொடுத்தது இல்லை. ஆனால் தோனி படத்தின் தெலுங்கு வர்ஷனில் நான் பாடிய ஒரு பாடலால் எனக்கு பல மெலடி பாடல் கிடைத்தது. அதற்கு காரணம் இளையராஜா என்று கூறியுள்ளார்.
தனது குடும்பம் பற்றி பேசிய அவர், எனது அப்பா எம்.ஜி.ஆருடன் இருந்தவர். அவரது அரசியல் மேடைகளில் நான் பாடி இருக்கிறேன். ஆனால் நான் சினிமாவில் பாடுவேன் என்று அவர் நம்பவில்லை. என் அம்மாவும் தங்கையும் எனக்காக இளையராஜா வீட்டு வாசலில் நின்று வாய்ப்பு கேட்டுள்ளார்கள். அப்போதெல்லாம் எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று சொன்னேன். ஆனால் எங்க அப்பா இறந்து அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் இறந்து ஒரு வாரம் கழித்து நான் பாடினேன். ராஜ கீதம் நிகழ்ச்சியில் சங்கமம் படத்தில் வரும் மழைத்துளி மழைத்துளி பாடலை பாடினேன் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us