இந்த பாட்டை என்னால் பாட முடியலையே... நள்ளிரவில் இளம் கவிஞரிடம் வருத்தப்பட்ட எஸ்.பி.பி!

இந்த பாடலை என்னால் பாட முடிவில்லை என்று மிகவும் வருத்தமாக உள்ளது என்று பாடகர் எஸ்.பி.பாலசுப்பரமணியன் நள்ளிரவில் கவிஞருக்கு போன் செய்து புலம்பியுள்ளார்.

இந்த பாடலை என்னால் பாட முடிவில்லை என்று மிகவும் வருத்தமாக உள்ளது என்று பாடகர் எஸ்.பி.பாலசுப்பரமணியன் நள்ளிரவில் கவிஞருக்கு போன் செய்து புலம்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
SPB Song Snehan

தன்னை விட வயதில் சிறியவராக இருந்தாலும், கவிஞர் சினேகன் எழுதிய ஒரு பாடலை தன்னால் பாட முடியவில்லையே என்று நள்ளிரவில் போன் செய்து புலம்பியுள்ளார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அது என்ன பாடல் தெரியுமா?

Advertisment

1997-ம் ஆண்டு புத்தம்புது பூவே என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமானவர் சினேகன். அவரது துரதிஷ்டவசமாக அந்த படம் வெளியாகவில்லை. அதன்பிறகு,  2000-ம் ஆண்டு தம்பி ராமையா இயக்கத்தில் வெளியான மனுநீதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்தவர் தான் சினேகன்.

குறிப்பாக, பாண்டவர் பூமி, மௌனம் பேசியதே, ஏப்ரல் மாதத்தில், சொக்க தங்கம், சாமி, மன்மதன், கழுகு உள்ளிட்ட படங்களில் சேரன் எழுதிய பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாடல் ஆசிரியராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சினேகன், பிக்பாஸ் முதல் சீசனில், போட்டியாளராக பங்கேற்று இறுதிவரை பிக்பாஸ் வீட்டில் இருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் சினேகன் பிரபலமானார்.

யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சினேகன், கோமாளி, பூமி, உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த சினேகன், கடைசியாக அருண்விஜய் நடிப்பில் வெளியான யானை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள சினேகனுக்கு ஒருநாள் நள்ளிரவில் ஒரு போன் கால் வந்துள்ளது. அந்த போனை எடுத்து பேசிய சினேகனிடம் நான் பாலு பேசுகிறேன் என்று எதிர்முனையில் இருந்தவர் சொல்ல, எந்த பாலு என்று சினேகன் கேட்டுள்ளார்.

Advertisment
Advertisements

அதன்பிறகு அவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்பது தெரிந்து அவரிடம் சினேகன் நலம் விசாரித்துள்ளார். அப்போது எஸ்.பி.பி, கவிஞரே என்ன அருமையாக ஒரு பாடலை எழுதி இருக்கீங்க. சில பாடலை தன்னால் பாட முடியவில்லையே என்று ஒவ்வொரு பாடகருக்கும் ஒரு ஏக்கம் இருக்கும். அது மாதிரி இந்த பாடலை என்னால் பாட முடிவில்லையே என்று எனக்குள் வருத்தம் வந்துவிட்டது. அந்த பாடலின் ஒவ்வொரு வரியையும் நான் திரும்ப திரும்ப கேட்டேன். என் மனதே கணத்துப்போய்விட்டது. ரொம்ப நல்ல வரிகள் என்று கூறி சுமார் கால்மணி நேரமாக சினேகனிடம் பேசியுள்ளார் எஸ்.பி.பி.

அமீர் இயக்கத்தில் ஜீவா சரண்யா இணைந்து நடித்த ராம் படத்தில் இடம்பெற்ற ஆராரிராரோ என்ற பாடலை தான் எஸ்.பி.பி.புகழ்ந்து பேசியுள்ளார். இந்த பாடலை பாடகர் யேசுதாஸ் பாடியிருந்தார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: