2 மணி நேரம் தாமதம், தொடர்ந்து 10 பாடல்கள் பாடி அசத்திய எஸ்.பி.பி; கடைசியில் இசைஞானி வைத்த செக்!

எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இளையராஜாவின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்தாலே இந்த பாடல் பெரிய வெற்றியாகிவிடும் என்பது பலரின் பேச்சு.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இளையராஜாவின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்தாலே இந்த பாடல் பெரிய வெற்றியாகிவிடும் என்பது பலரின் பேச்சு.

author-image
WebDesk
New Update
SPB Ilayar

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரைப்படங்களில் பாடல் பாடும்போது நாங்கள் திருச்சியில் ஒரு இசை கச்சேரி நடத்தினோம். அந்த கச்சேரிக்கு 2 மணி நேரம தாமதமாக வந்தாலும் தொடர்ந்து 10 பாடல்கள் பாடி அசத்தியவர் என்று இசையமைப்பாளர் இளையராஜா எஸ்.பி.பிக்கு புகழாரம் சூட்டிய த்ரோபேக் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் இளையராஜா. 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள அவர், பல இளம் பாடகர்களையும் அறிமுகம் செய்துள்ளார். அதேபோல் இந்திய சினிமாவில் பல மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடி முன்னணி பாடகராகவும் வலம் வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இளையராஜாவின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்தாலே இந்த பாடல் பெரிய வெற்றியாகிவிடும் என்பது பலரின் பேச்சு.

அதேபோல் இளையராஜா சினிமாவுக்கு வருவதற்கு முன்பே சினிமாவில் பாடகராக முன்னணியில் இரந்த எஸ்.பி.பி, இளையராஜா குழுவினர் இசை கச்சேரி நடத்தும்போது அதில் பாடல் பாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்போது ஒருநாள் திருச்சியில் இசை கச்சேரி நடக்கும்போது இசை குழுவினர், திருச்சிக்கு சென்றுள்ளனர். ஆனால் எஸ.பி.பி தான் ஒரு பெரிய பி்ன்னணி பாடகர் நீங்கள் முதலில் போங்க, நான் காரில் வருகிறேன் என்று கூறியுள்ளார். அதன்படி, இளையராஜா குழுவினர் திருச்சிக்கு சென்று கச்சேரியை தொடங்கியுள்ளனர்.

9 மணிக்கு வர வேண்டிய எஸ்.பி.பி வரவில்லை. அதனால் என்ன செய்வது என்று தெரியாத இளையராஜா மற்ற பாடகர்களை வைத்து கச்சேரியை தொடங்கியுள்ளார். 2 மணி நேரம் தாமதமாக வந்த எஸ்.பி.பி தொடர்ந்து 10 பாடல்கள் பாடினார். திருச்சி தேவர் மகாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மறக்க முடியாது என்ற இளையராஜா கூறியுள்ளார். அதே நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதற்கு பதில் தெரிவித்த எஸ்.பி.பி, நான் பின்னணி பாடகர் என்பதால் காரில் வரவில்லை.

Advertisment
Advertisements

அன்று எனக்கு ரொக்கார்டிங் இருந்தது. அதனால் தான் நான் தனியாக வருகிறேன் என்று சொன்னேன். அன்று என் தாய் மாமா என்னுடன் வந்தார். நான் பாடுவதை அவர் பார்க்க வேண்டும் என்ற விரும்பினார் அதனால் அவரை அழைத்து வந்தேன். வரும் வழியில், வண்டி பஞ்சர் ஆகிவிட்டது. அதனால் பாலத்தில் இருந்து நடந்தே ஓடி வந்து தான் நான் கச்சேரி மகாலுக்கு வந்தேன் என்ற எஸ்.பி.பி கூறியுள்ளார், இந்த த்ரோபேக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: