/indian-express-tamil/media/media_files/2025/08/31/msv-and-spb-2025-08-31-20-54-22.jpg)
தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடி முன்னணி பாடகராக வலம் வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், முதன் முதலில், பாடல் பாட வாய்ப்பு தேடி எம்.எஸ்.வியை சந்தித்தபோது அவர், தமிழ் கற்றுக்கொண்டு வருமாறு கூறியுள்ளார்
தமிழ் சினிமாவில், பல ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி பாடகராக வலம் வந்தவர் தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியன். எம்.ஜி.ஆர் நடிப்பில் 1969-ம் ஆண்டு வெளியான அடிமைப்பெண் படத்தில் ‘ஆயிரம் நிலவே’ பாடல் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார், அதன்பிறகு, எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி ரஜினிகாந்த், கமல்ஹாசன் வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியன், எம்.எஸ.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர், உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.
இவர் நிகழ்ச்சி ஒன்றில், தனது முதல் தமிழ் சினிமா பாடகர் வாய்ப்பு குறித்து பேசியுள்ளார். அதில், தமிழில் பாட பாட வேண்டும் என்று ரொம்ப ஆசை. அப்போது விளம்பர ஆர்டிஸ்ட் பரணிகுமார் என இருந்தார் ரொம்ப பேமஸ். நான் கல்லூரியில் படிக்கும் போது பாடல் பாடியிருந்தேன். அப்போது அங்கு வந்த பரணிகுமார் எனக்கு சான்ஸ் வாங்கி தருவதாக கூறினார். எனக்கு தமிழ் ஒன்றுமே வராதுங்க. தமிழ் சுத்தமா உச்சரிக்க வராதுங்க. எனக்கு யார் சான்ஸ் கொடுப்பாங்க என்று கேட்டேன்.
அதற்கு அவர், அதெல்லாம் பார்த்துக்கலாம் வாய்யா என்று சொல்லி ஸ்ரீதர் இயக்கததில், நெஞ்சிருக்கும் வரை படம் பண்ணிட்டு இருந்தார். நான் அங்கு போனபோது நிறைய இசை கலைஞர்கள் இருந்தார்கள். இதற்கு முன்பு நான் அப்படி பார்த்ததே இல்லை. ஸ்ரீதர் சார் ப்ரி ஆனதும், பரணி இந்த பையனை கூட்டி வந்தான். நல்லா. பாடுவானாம். கொஞ்சம் கேக்கரீங்களா என்று எம்.எஸ்.வியிடம் சொல்ல, அவரும் சரி பாடு என்று சொன்னார். நான் ஒரு ஹிந்தி பாடு பாடுந்தேன். அவர் ரொம்ப ரசிச்சிட்டு தமிழ் ஏதாவது பாடு தம்பி என்றார்.
நான் சொன்னேன் சரி தமிழ் எனக்கு புத்தகம் இருந்தா பாடுவேன். ஆனால் அதை கூட தெலுங்குல தான் எழுதிப் பாடுவேன். சில பல்லவிகள் மட்டும் எனக்கு வரும் என்று சொன்னேன். சரி என்ன பல்லவி வரும் பாடு என்றார். நிலவே என்னிடம் நெருங்காதே. நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை என்று பாடினேன். அப்போது தமிழ் கொடுத்தா பார்த்துட்டு பாடுவியா என்று கேட்க, தமிழ் படிக்க வராது சார் என்று சொன்னேன். சரி யாராவது சொன்னா தெலுங்குல எழுதிப் பாடுவியா என்றார். சரி என்றான். அதன்பிறகு தெலுங்குல எழுதிட்டு பாடி காட்டிச்சேன்.
அதை கேட்ட எம்.எஸ்.வி, உச்சரிப்புல அந்த அளவுக்கு குறை இல்லை. சின்ன கரெக்ஷன் பண்ணிக்கணும். நீ எப்போ தமிழ் எழுதப் படிக்கு நல்லா கற்றுக் கெடுத்து என்னிடம் வரியோ உனக்கு நிச்சயமா சான்ஸ் உண்டு என்றார். அதன்பிறகு சினிமா போஸ்டர் பார்த்தே தமிழ் கத்துக்கிட்டேன். ஒரு நாள் நான் பரணி ஸ்டூடியோலிருந்து ஒரு தெலுங்கு பாடு பாடி வெளியே வந்துட்டிருக்கிறேன். எம்.எஸ்.வி சாரை பார்த்து வண்ணம் சொன்னேன். அவரும் வணக்கம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்,
சிறிது நேரத்தில் திரும்பி வந்த அவர், நீ பாலசுபர்மணியன் தான். என்ன இரண்டு வருடமாக இந்தப் பாக்கவே இல்லையே என்று கேட்டார். இப்போதுதான் கொஞ்சம் தமிழ் பேசுறேன் அப்படினால்தான் வந்தேன். நாளைக்கு ரியார்ஸல்ஸ் இருக்கு வந்துடு என்று சொன்னார். கிடைத்துதான் சான்ஸ் நான் போனேன். ஒரு பாட் ரியார்ஸல் பண்ணோம். அடுத்த நாள் ரிகார்டிங்கும் பண்ணியாச்சி. ஹோட்டல் ரம்பா என்று ஒரு படம். இந்த படத்தில் நான் முதலில் பாடினேன். சாரதா ஸ்டூடியோல ரிகார்ட்டு பண்ணார்.
ரிகார்ட்டு பண்ணியாச்சா அந்த படமேயே வெளியே வரல. என்னடானம் தமிழ்ல எப்படி ஒரு சான்ஸ் கிடைத்தது வெளியே வரல. சகனமே சரியில்லலை என நினைத்தேன். ஆனால் ரொம்ப என்கரேஜ் பண்ணி, அடுத்து ஜெம் மூவிஸ் ஆபிஸ் கொண்டு போய் சாந்தி நிலையம் படத்தில் எனக்கு முதல் முதல் சான்ஸ் கொடுத்தாங்க. அதுதான் இயற்கையென்னும் இளையகன்னி என்ற பாடல் என எஸ்.பி.பி.கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.