Advertisment

சுசி லீக்ஸ் சர்ச்சை : தனுஷ் தான் முக்கிய காரணம் ; மீண்டும் சுசித்ரா சர்ச்சை

சுசி லீக்ஸ் வெளியானதற்கு காரணம் நான் இல்லை என்று பாடகி சுசித்ரா கூறியுள்ளது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Dhanush Suchithra

தனுஷ் - சுசித்ரா

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் நடிகைளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய பாடகி சுசித்ரா, அதன்பிறகு எந்த பதிவுகளும் வெளியிடாத நிலையில், தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் நடிகர் தனுஷ் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தனுஷ், தனது தந்தை கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் வெற்றியை பெற்றிருந்தாலும், தனுஷின் தோற்றம் குறித்து பலரும் கிண்டல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து செ்லவராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் என்ற படத்தில் தனுஷ் நடித்திருந்தார்.

இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், தனுஷின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து திருடா திருடி, புதக்கோட்டையில் இருந்து சரவணன், பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் நடித்த அனைத்து படங்களுமே பெரிய வெற்றியை கொடுத்தது. இதுவரை 49- படங்களில் நடித்துள்ள அவர், தனது 50-வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்துள்ளார்.

ராயன் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தற்போது குபேரா படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். மேலும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கிய வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமையுடன் வலம் வரும் தனுஷ், தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தாலும், அவரரை சுற்றி சர்ச்சைகளும் வந்துகொண்டு தான் இருக்கின்றன.

அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, பாடகி சுசித்ரா சுசீ லீக்ஸ் என்ற பெயரில், நடிகர் நடிகைகளின் சில அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்களில் நடிகைள் நிக்கி கல்ராணி, அனுயா உள்ளிட்ட சிலர் இருந்த நிலையில், இந்த புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு அமைதியாகிவிட்ட நிலையில் தற்போது பாடகி சுசித்ரா தனது பேட்டியின் மூலம் மீண்டும் பரபரப்பாக்கியுள்ளார்.

சமீபத்தில் தனியார் சேனலுக்கு சுசித்ரா அளித்த பேட்டியில், சுசி லீக்ஸ் விவகாரத்தில் தேவையில்லாமல் என்னை இழுத்துவிட்டுவிட்டார்கள். இந்த விஷயத்தில் நடிகர் தனுஷ் மற்றும் எனது முன்னாள் கணவர் கார்த்திக் இருவரும் பிராங்க் செய்துவிட்டனர். ப்ராங்க் செய்ய ஏதாவது அக்கவுண்ட் வேண்டும் என்று பேசியபோது தான் எனது கணவர் கார்த்திக் எனது அக்கவுண்டை தனுஷிடம் கொடுத்துவிட்டார்.

இயக்குனர் ஜவகரின் மொபைல்போனை வாங்கி கார்த்திக்கு கண்டபடி மெசேஜ் செய்வார் தனுஷ். அதுவும் ஒருவகையான ப்ராங்க் என்று சொல்வார்கள். இந்த விஷயத்தை எனது பெயர் தப்பாக பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல், என்னை மனநிலை சரியில்லாதவர் என்று முத்திரை குத்தினார்கள். இதை பார்க்கும்போது தான் சிரிப்பாக வருகிறது. தனுஷ் மீது எனக்கு கோபம், மற்றுமு் வன்மம் இருந்தாலும், அவரது விவாகரத்து வாழ்க்கையில் தனுஷ் செய்தது சரிதான் என்று சுசித்ரா கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Singer Suchitra Dhanush Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment