/indian-express-tamil/media/media_files/2025/06/27/srikanth-suchithra-2025-06-27-16-06-54.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஸ்ரீகாந்துடன் நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தமிழ் சினிமாவில் போதைப்பொருள் கலாச்சாரம் குறித்து பாடகி சுசித்ரா பல்வெறு தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார். குமுதம் ரிப்போர்ட்டர் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ஸ்ரீகாந்த்தை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியாது. ஆனால் அவர் போதைப்பொருள் பயன்படுத்துகிறார் என்பது மற்றவர்கள் சொல்வதை கேட்டிருக்கிறேன். இதில் பல நடிகைகளுக்கும் தொடர்பு இருக்கலாம். அவர்களும் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டவுடன், அவருக்கு ரத்த பரிசோதனை எப்படி செய்தார்கள் என்பது ஆச்ரியமாக இருக்கிறது. பெரும்பாலும் இப்படி போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் ரத்த பரிசோதனை செய்ய ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ரத்த பரிசோதனை என்றாலே அவர்களின் வழக்கறிஞரை அழைத்து பரிசோதனைக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கிவிடுவார்கள். பாலிவுட் நடிகர்கள் இப்படித்தான் ரத்த பரிசோதனைக்கு கொடுக்கவே மாட்டார்கள்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக்கான் மகன் கூட ரத்த பரிசோதனை செய்துகொண்டாரா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த கொக்கைன் என்ற போதைப்பொருளை பயன்படுத்தினால் நம்மதான் ராஜா என்ற மென்டாலிட்டி வந்துவிடும். சினிமாக்காரர்கள் என்றாலே முக்கியமாக ஆல்கஹால், பொறுக்கித்தனம் இவை இரண்டுமே இருக்கும். போதைப்பொருள் என்பது தமிழ் சினிமாவுக்கு கெஸ்ட்ரோலில் நடிக்க வரும் மும்பை நடிகர்கள் கொண்டுவந்த பழக்கம் இது.
அதேபோல் ஒரு பாடலுக்கு நடனமாட வரும் நடிகைகள் ஒரு வேலையுடன் இல்லாமல் 10 வேலை செய்து அதிகமான வருமானத்துடன் தான் திரும்பி செல்வார்கள். சென்னையில் அவர்கள், மணி லண்ட்ரி, போதைப்பொருள் கைமாற்றுதல், பாலியல் விஷயங்கள் என எது செய்தாலும் அவர்கள் திரும்பி அவர்கள் ஊருக்கே சென்றுவிட்டால் ஒன்றும் தெரியாது. இப்போ ஸ்ரீகாந்த் என் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி ஜாமின் கேட்கிறார். ஆனால் அவர் கொக்கைன் பயன்படுத்தியபோது குழந்தை பற்றி யோசிக்கவில்லையா?
அதேபோல் ஷூட்டிங்கில் இருக்கும்போது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னால் பாதியில் விட்டுவிட்டு போய்விடுவாரா? அம்மா இறந்தபோது கூட நான் ஷூட்டிங்கில் இருந்தேன் என்று சொன்ன பல நடிகர்களின் இன்டர்யூவை நாம் பார்த்திருக்கிறோம். ஒரு சாதாரண மனிதனை பிடித்து உள்ளே வைக்கும்போது அவர் தனது குழந்தையை பார்க்க போக வேண்டும் என்று சொன்னால் விடுவார்களா? இவர்கள் சராசரி மனிதர்கள் அல்ல. இவர்களுக்கு வேறு சட்டம்.
பாரதிராஜா இத்தனை வயதிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் முகத்தில் இளமை தெரிகிறது. இதற்கு காரணம் அவர் போதைப்பொருளை தொடவில்லை. அவர் வயதானர் என்பதால் போதைப்பொருள் எடுத்துக்கொள்ளவில்லை என்று சொன்னால், இன்றைய இளம் தலைமுறை போதைப்பொருளை பயன்படுத்துகிறது என்று தானே அர்த்தம் என்று பாடகி சுசித்ரா அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.