தமிழ் சினிமாவில் மூச்சுவிடாமல் முதலில் பாடியவர் டி.எம்.சௌந்தரராஜன் தான் என்று அவரின் வாழக்கை வரலாற்றை ஆவண படமாக எடுத்து வரும் இயக்குனர் விஜய் ராஜ் கூறியுள்ளார்.
1922-ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் டி.எம்.சௌந்திரராஜன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பலரின் படங்களில் பாடல்கள் பாடியுள்ள இவர், பெரும் கோபக்காரர், அனைவரிடமும் கோப்படுவார் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அவரது அருகில் இருந்து பார்த்தவர்களுக்குதான தெரியும் அவரின் அருமை என்று இயக்குனர் விஜய்’ராஜ் கூறியுள்ளார்.
வாவ் தமிழா என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள இயக்குனர் விஜய்ராஜ் கூறுகையில்,
டி.எம்.சௌந்திரராஜன் ஆணவம் என்று இருந்த பெயரை ஆவணமாக மாற்ற வேண்டும் என்பதால் தான் இந்த ஆவணப்படத்தை எடுத்து வருகிறேன். அவரைப்பற்றி பலரும் பலவிதமாக சொன்னார்கள். ஆனால் அவர் அருகில் இருந்தவர்களுக்கு மட்டுமே அவரின் அருமை தெரியும். தமிழில் எஸ்பிபி ஹிட்ஸ், மனோ ஹிட்ஸ் என பல பாடகர்களின் ஹிட்ஸ் இருக்கிறது. ஆனால் டி.எம்.எஸ் ஹிட்ஸ் என்று எதுவுமே இல்லை.
ஏனென்றால் அவர் எம்.ஜிஆருக்கு பாடும்போது அவரது குரலாகவும், சிவாஜிக்கு பாடும்போது அவரது குரலாகவும் மாற்றி பாடியதால் அவர் தெரியாமல் இந்த பாடல்கள் அனைத்தும் எம்.ஜி.ஆர் தத்துவ பாடல்கள், சிவாஜி காதல் பாடல்கள், எம்.ஜி.ஆர் சோகப்பாடல்கள் என மாறிவிட்டது. ஆனாலும் இப்போது எம்.ஜி.ஆர் பிறந்த நாள் இறந்த நாள் என்றால் டி.எம்.எஸ் குரல் தான் ஒளிக்கிறது
மேலும் நடிகர்களின் வயதுக்கு ஏற்றது போல் குரலில் பாடுவதில் டி.எம்.எஸ்க்கு நிகர் அவர்தான். அதேபோல் தனது குரலை அவரே ரசிப்பார். அதேபோல் அம்பிகாபதி என்ற படத்தில் வடிவேலும் மயிலும் என்ற பாடலை மூச்சுவிடாமல் பாடியிருப்பார். தமிழ் சினிமாவில் முதன் முதலில் மூச்சுவிடாமல் பாடிய முதல் பாடகர் டி.எம்.எஸ் தான் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“