தமிழ் சினிமாவில் வெண்கல குரலுக்கு சொந்தக்காரர் என்று சொன்னால் அவர் டி.எம்.சௌந்திரராஜன் தான். சிவாஜிக்கு, அவர் மாதிரியும்,எம்.ஜி.ஆருக்கு அவர் மாதிரியும் பாடல்கள் பாடி அசத்தியுள்ள இவர்,தமிழ் சினிமாவில் 70-க்கு மேற்பட்ட நடிகர்களுக்கு தனது குரலின் மூலம் அவர்கள் பாடுவது போன்றே பாடி அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
Advertisment
அதேபோல் கண்ணதாசன் எழுதிய பல பாடல்களுக்கு தனது குரலின் மூலம் உயிர் கொடுத்துள்ள, டி.எம்.சௌந்திரரஜான், கண்ணதாசனை ஒருமுறை சந்தித்தபோது நடந்த சுவாரஸ்யமான அனுபவத்தை தனது நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஒருமுறை சேலத்திற்கு கச்சேரிக்காக சென்றிருந்தேன். அங்கு துவாரஹா என்ற ஹோட்டலில் தங்கியிருந்தேன். நான் இந்த ஹோட்டலில் வழக்கமாக 15-வது அறையில் தான் தங்குவேன். ஆனால் அன்று அந்த அறையில் ஒருவர் தங்கியிருக்கிறார் என்பதால் எனக்கு 14-வது அறை கொடுத்தார்கள். முருகன் கோவிலுக்கான சிறப்பு கச்சேரிக்காக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
மறுநாள் காலை 9 மணிக்கு நான் குளித்துவிட்டு விபூதி பூசிக்கொண்டு ரெடியாகி வெளியில் வரும்போது கண்ணதாசன் டிரைவர் என்னை பார்த்தவிட்டார். அய்யா கவிஞர் வந்திருக்கிறார். அவரை பாருங்களே என்று சொன்னார். அவர் பல கோலங்களில் இருப்பார்பா நான் போய் எப்படி பார்க்க முடியும் என்று சொன்னேன். அதற்கு அவர், சும்மா போய் பாருங்க அவர் ஒன்றும் சொல்ல மாட்டார் என்று சொன்னார்.
நான் உள்ளே சென்றபோது, ஒரு அம்மா மடியில் படுத்திருந்தார். இவர் காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். ஏன்யா உங்களுக்கு இந்த மாதிரி ஒரு எண்ணம். அந்த அம்மா படுத்துக்கிட்டு இருக்காங்க அவங்க மேல லெட்டர் பேட் வைத்து, மயங்கிக்கிட்டே பாட்டு எழுதிட்டு இருக்கீங்களே உங்களுக்கு என்ன கற்பனை வரும் என்று கேட்டேன். அதற்கு அவர் டி.எம்.எஸ். உனக்கு அது தெரியாது.
நீ இதையெல்லாம் அனுபவிக்கல அதனால் இந்த கற்பனை எல்லாம் உனக்கு வராது என்று சொன்னார். எனக்கு அந்த கற்பனைவே வர வேண்டாம். நீங்கள் ரொம்ப நான் இந்த உலகத்தில் நல்லா இருக்கனும் அய்யா என்று சொன்னேன். அதற்கு அவர், நீதான் பாடியிருக்கியே ‘’எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன், நான் வாழ யார் பாடுவார்’’ எல்லாரும் சந்தோஷமா இருக்க நான் பாட்டு கொடுத்திருக்கேன். நான் சந்தோஷமா இருக்க எவன்டா பாட்டு பாடுகிறான்.
கண்ணதாசன் தப்பு செய்யுறான் தவறு செய்யுறான் என்று எல்லாரும் என்னை சொல்கிறார்கள். நான் இதை மனதில் வைத்துக்கொண்டு தவிக்கிறேன். நீ தப்பு பண்ணல, நீ ரொம்ப நல்லவனா? நெஞ்சை தொட்டு பாருடா நீ, ‘’நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்’’ என்று மீண்டும் பாடலை சொன்னார். இந்த தமிழுக்காத்தான் இப்படி பண்ணிட்டு இருக்கேன் என்று சொன்னார்.
எவ்வளவு பெரிய மேதை, தான் கெட்டாலும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தாரே, கெட்டா தப்பு என்று தெரியுது. குடியினால் எவ்வளவு தப்பு என்று அவரே எழுதி இருக்கிறார். ஆனால் அவரே குடிக்கிறார் என்றால், தமிழை வளர்க்க அவரின் கற்பனை வளத்தை பெருக்க இதை செய்திருக்கிறார் என்று டி.எம்.எஸ். கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“