80 ஆண்டுகள் பழமை, 5 மாடி பங்களா, இப்போ ப்ளாட்டா மாறிடுச்சு; பாடகர் உன்னி கிருஷ்ணன் ஹோம் டூர் வைரல்!

காதலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். இந்த படத்தில் இடம் பெற்ற ‘என்னவளே அடி என்னவளே’, பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் பெரிய வெற்றியை பெற்றிருந்தது.

காதலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். இந்த படத்தில் இடம் பெற்ற ‘என்னவளே அடி என்னவளே’, பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் பெரிய வெற்றியை பெற்றிருந்தது.

author-image
WebDesk
New Update
Unikrishnan Singer

80 ஆண்டுகள் பழையான வீடு, சென்னை ராயப்பேட்டையின் அடையாளம் எங்கள் வீடு தான், இப்போது ப்ளாட்டாக மாறிவிட்டது என்று பிரபல பின்னணி பாடகர் பி.உன்னி கிருஷ்ணன், பேசியுள்ளார். அவரது வீட்டின் ஹோம் டூர் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் மெலடி பாடல்களுக்கு புகழ்பெற்ற பாடகர்களில் ஒருவர் உன்ன கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், என 5 மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள இவர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். இந்த படத்தில் இடம் பெற்ற ‘என்னவளே அடி என்னவளே’, பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் பெரிய வெற்றியை பெற்றிருந்தது.

அதே சமயம் இந்த பாடலுக்காக உன்னி கிருஷ்ணன் சிறந்த பாடகருக்கான தேசிய விருதை பெற்றிருந்தார். அதன்பிறகு, பவித்ரா, கருத்தம்மா படத்தில் தென்மேற்கு பருவக்காற்று, ஆசை, சந்திரலேகா, பூவே உனக்காக, காதல் தேசம், ரட்சகன் படத்தில் சோனியா, சோனியா உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ள உன்னி கிருஷ்ணன், கடைசியாக 2018-ம் ஆண்டு சந்தோஷத்தில் கலவரம் என்ற படத்தில் பாடல் பாடியிருந்தார். பல மெலடி ஹிட் பாடல்களை பாடிய உன்னி கிருஷ்ணன் தற்போது ஆயுர்வேதிக் க்ளினீக் நடத்தி வருகிறார்.

வாவ் தமிழா யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில், இந்த வீடு, 80 ஆண்டுகள் பழமையானது. வீட்டுக்குள் கிரி்ககெட் ஆடும் அளவுக்கு வசதிகள் இருந்தது. ஆனால் இப்போது இது ப்ளாட்டாக மாறிவி்ட்டது. இந்த வீட்டை அப்படியே பொம்மை மாதிரி செய்து வைத்திருக்கிறோம் என்று அதை காட்டியுள்ளார். மேலும் வீட்டில் பெரிய ஊச்சல் ஒன்று இருக்கிறது. இதை பழைய கடைசியில் இருந்து வாங்கியதாகவும் இது இப்போது கிடைப்பது கஷ்டம் என்றும் கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

மேலும் பழைய வீட்டில் இருந்து பல பொருட்களை நினைவுச்சின்னமாக இந்த வீட்டில் பாதுகாத்து வருவதாக கூறியுள்ள உன்னி கிருஷ்ணன், நான் பிறந்தது இந்த வீடு தான், இந்த வீடு 3 மாடி இருந்தது. ஆனால் இப்போது இருக்கும் இந்த பில்டிங்கை விட, 5 மடங்கு அதிக உயரம் இருந்தது. இது 1989-ம் ஆண்டு ப்ளாட்டாக மாறிவிட்டது. நாங்கள் இந்த வீட்டில் கூட்டு குடும்பமாக இருந்தோம். அதன்பிறகு எல்லோரும் பிரிந்து சென்றுவிட்டார்கள். இந்த வீட்டில் பழங்கால வால்க்ளாக்,  யானை முகத்தில் வைக்கும் அலங்கார பொருள், புத்தகங்கள் வைக்க அலமாறி என்ற பல வைத்துள்ளார்.

ஆன்மீக புத்தகங்கள் நிறைய உள்ளது. கச்சேரிகள் போகும்போது இவை அனைத்தும் உதவும், ராமலிங்க சாமிகளில் ஆறாம் திருமுறை புத்தகம் உள்ளது. அதேபோல் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் குறித்த புத்தகமும் இருக்கிறது. அதேபோல் தான் பாடிய அனைத்து பாடல்களுக்கான கேசட்டையும் உன்னி கிருஷ்ணன் பத்திரமாக அதற்கென்று தனியாக அலமாறி அமைத்து வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: