2 வருட கடின உழைப்பு; ஸ்காட்லாந்தில் பட்டம் பெற்ற கொடிவீரன் தங்கை; சினிமாவில் ரீ-என்ட்ரி!

2009ல் வெளியான 'ரேனிகுண்டா' திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஒருவர் ஸ்காட்லாந்தில் படிப்பை முடித்து பட்டம் வாங்கிய போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

2009ல் வெளியான 'ரேனிகுண்டா' திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஒருவர் ஸ்காட்லாந்தில் படிப்பை முடித்து பட்டம் வாங்கிய போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

author-image
WebDesk
New Update
kodiveeran

2009-ல் வெளியான ‘ரேனிகுண்டா’ தமிழ்ப் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு நடிகை, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் எனப் பல மொழிகளில் நடித்துள்ளார். தற்போது இவர் படித்து பட்டம் வாங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisment

2009-ல் வெளியான 'ரேனிகுண்டா' தமிழ்த் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை சனுஷா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் ஸ்காட்லாந்தில் படித்து பட்டம் வாங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

கேரளாவைச் சேர்ந்த நடிகை சனுஷா, 2000-ம் ஆண்டு வெளியான 'தாதா சாகேப்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மலையாளத்தில் பல படங்களில் நடித்த பிறகு, விக்ரமின் 'காசி' திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

'காசி' படத்திற்குப் பிறகு, 'சுந்தர் டிராவல்ஸ்' படத்தில் நடித்தார். மலையாளம் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்த பிறகு, 'பீமா', 'ரேனிகுண்டா', 'நாளை நமதே', 'ஈதான்', 'அலெக்ஸ் பாண்டியன்', 'கொடி வீரன்' போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். மிகவும் குறைவான படங்களில் நடித்து இருந்தாலும் நன்றாக தனது கேரக்டரில் நடித்து இருப்பார்.

Advertisment
Advertisements

இவரது கடைசிப் படம், 2023-ல் வெளியான மலையாளத் திரைப்படமான 'ஜலதாரா பம்ப் செட் சின்ஸ் 1962'. இந்தப் படத்திற்குப் பிறகு, சனுஷா நடிப்பில் கவனம் செலுத்தாமல் தனது படிப்பில் முழு கவனம் செலுத்தினார். தற்போது பட்டம் பெற்றுள்ளார். இது குறித்து தனது மகிழ்ச்சியை இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

சனுஷா சந்தோஷ், ஸ்காட்லாந்தில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். இரண்டு ஆண்டுகள் கடின உழைப்பிற்குப் பிறகு, அங்கு படித்த தனது அனுபவங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

சனுஷா தனது பதிவில், “வீட்டை விட்டுத் தூரமாக இருந்தது, கண்ணீர், தூக்கமில்லாத இரவுகள், பல பகுதி நேர மற்றும் முழு நேர வேலைகள், கடின உழைப்பு, உடல்நலப் பிரச்சினைகள், மன அழுத்தம் போன்ற பல சவால்களை நான் எதிர்கொண்டேன். இப்போது அதற்கான பலன் கிடைத்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Heroin Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: