Advertisment
Presenting Partner
Desktop GIF

கமர்சியல் டு மாஸ் ஹீரோ: மாவீரனில் அடுத்த கட்டம் நகர்ந்த சிவகார்த்திகேயன்

விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடும் நடிகர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டார்.

author-image
WebDesk
New Update
Maaveeran

சிவகார்த்திகேயன் மாவீரன்

நம்ம வீட்டு பிள்ளை என்று பெண்களாலும் கோலிவுட் பிரின்ஸ் என்று ரசிகர்களாலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் இன்று காலை வெளியானது. முதல் நாள் முதல் காட்சி என்கிற பெருமிதமும் பேரார்வமும் ரசிகர்களின் இதயத்துடிப்பில் இணைந்து விட்டது. கடந்த முப்பது வருடங்களாக குறிப்பாக 80-களின் இறுதியில் ரஜினி படங்களை முதல் நாள் பார்ப்பதென்பது கின்னஸ் சாதனைக்கு இணையாக வர்ணிக்கப்பட்ட காலம்.

Advertisment

கமல், விஜயகாந்த். பிரபு, கார்த்திக் போன்றவர்களுக்கும் பெருமளவில் ரசிகர்கள் இருந்தாலும் ரஜினிக்கு இருந்த வெறித்தனமான ரசிகர்கள் நடத்திய கொண்டாட்டம் என்பது அன்று தொடங்கி இன்றுவரை பேசுபொருளாக இருப்பதை அறிவியல் விதிகள் போல் மாற்ற மற்ற விதியாக விதைக்கப்பட்டுவிட்டது. மற்ற நடிகர்களின் மற்றும் ரசிகர்களின் எண்ணங்களையும் மடைமாற்றம் செய்தது இந்த ஆரவார கொண்டாட்டங்கள்.

தங்களது அபிமானத்துக்குறிய நடிகர்களுக்கும் அப்படி ஒரு கொண்டாட்டத்தை அடையாளப்படுத்திவிட வேண்டும் என்கிற ஆவலை தூண்டியதன் விளைவு கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக 10 ஆண்டுகளாக சமூவலைத்தளங்களின் தாக்கத்தால் வீரியமாக விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த கொண்டாட்ட மனநிலை விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடும் நடிகர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டார்.

இதுபோன்ற கொண்டாட்டங்களுக்கவே சில காட்சி அமைப்புகள் திணிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தாலும் அதுவே தீவிர ரசிகர்கள் வளர்ச்சிக்கும் ஒப்பனிங் எனப்படும் வசூல்களுக்கும் ஏதுவாக இருப்பதால் நடிகர்களும் சுலபமாக இதில் ஈர்க்கப்படுகின்றனர். எம்.ஜி.ஆர் படங்களில் படத்தின் சுவரஸ்யத்துக்காக கமர்ஷியல் அம்சங்கள் சேர்க்கப்பட்டது. ரஜினி காலகட்டத்தில் அது ரசிகர்கள் மற்றும் வெகுஜன மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் அவருக்கான காட்சி அமைப்புகள் வைக்கப்பட்டது.

அதனாலேயே ரஜினி படங்களின் பன்ச் டயலாக்களுக்கு இருந்த எதிர்பார்ப்புக்களும் ஆரவாரங்களும் மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை மற்ற நடிகர்களின் ரசிகர்களை தாண்டி அவர்களது வசனங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களும் தங்களது திரைப்பயணத்தின் கதாநாயக பிம்ப கதையின் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர தொடங்கிவிட்டனர்.

தற்போது, அவர்களின் வளர்ச்சி பிரம்மிக்கதக்கதாக இருந்தாலும் ரஜினி ஒப்பீடே அவர்களின் வளர்ச்சியும் பின்னடைவும், ஐம்பதை கடந்துவிட்ட அஜித்தும் நெருங்கிவிட்ட விஜய்யும் அடுத்த தலைமுறை நடிகர்களுடன் ரஜினியை போல் களம் காண்பது அவ்வளவு எளிதாக இருக்காது என்பதே யதார்த்தம்.

இந்த சூழலில் எம்ஜிஆர், ரஜினி பர்முலாவில் பயணித்த விஜய் தற்போது  விஜயகாந்த் பாணியில் அரசியல் பாதைக்கு திரும்புவது போன்ற செய்திகள் வலம் வரும் நிலையில் ரஜினி முருகன், சீமராஜா, டான் என கமர்ஷியல் கிங் வரிசையில் இணைந்த சிவகார்த்திகேயன் தற்போது சமூக கருத்துக்களுடன் வசனம் பேசி மாஸ் ஹீரோவாக முயன்று வெற்றியும் கண்டுள்ளார் மாவீரன் படத்தில்...

திரை விமர்சகர் : திராவிடஜீவா

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Sivakarthikeyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment