தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணமாக திகழ்ந்த சிவாஜி கணேசன், நடிப்பை பார்த்து ஒரு யானை அவரது பேச்சை கேட்டு பின்னோக்கி சென்றுள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இந்த சம்பவம் எப்போது நடந்தது தெரியுமா?
Advertisment
1966-ம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான படம் சரஸ்வதி சபதம். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்ரி, பத்மினி, தேவிகா, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, கே.வி.மகாதேவன் இசையமைக்க, கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். புராண கதையை அடிப்பயைாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தது
இந்த படத்தில் ஒரு காட்சியில், யானை சிவாஜி கணேசனை மிதித்து கொள்வதற்காக வரும். இந்த காட்சிக்கா ஒத்திகை பார்க்கும்போது சிவாஜிக்கு பதிலாக, ஒரு மரப்பெட்டியை வைத்து, ஒத்திகை பார்த்துள்ளனர். இந்த ஒத்திகையில், யானை பெட்டியை மிதிக்க வரும்போது இயக்குனர், நில் என்று சொன்னாலும்’, அவரது பேச்சை கேட்காமல் யானை பெட்டியை மிதித்துள்ளது.
யானையின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த படத்தின் இயக்குனர் ஏ.பி.நாகராஜன், இந்த காட்சியில் நீங்கள் நடிக்க வேண்டாம். வேறு ஒருவரை வைத்து எடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். ஆனால் ஒப்புக்கொள்ளாத சிவாஜி கணேசன், வேறு யாராவது நடித்தால் நடிப்பில் உயிர் இருக்காது. அதனால் நானே நடிக்கிறேன் என்று கூறி நடித்துள்ளார். அந்த காட்நசியில் யானை மிதிக்க வரும்போது சிவாஜி நில் அப்படியே திரும்பி செல் என்று கூறியுள்ளார்.
ஒத்திகையின்போது இயக்குனரின் பேச்சை கேட்காத அந்த யானை படப்பிடிப்பின்போது, சிவாஜி சொன்ன வார்த்தையை கேட்டு அப்படியே பின்னோக்கி சென்றுள்ளது. இதை பார்த்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் ஆச்சரியத்துடன் மற்றவர்களிடம் கூறியுள்ளார்.