/indian-express-tamil/media/media_files/2025/07/25/sivaji-ganesan-2025-07-25-13-06-36.jpg)
முதல் படமே பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், அதன்பிறகு தனது வெற்றியை தக்கவைத்துக்கொள்ள, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட சிவாஜி கணேசன், ஒரு படத்திற்காக ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் வசனம் பேசி நடித்துள்ளார்.
1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் ஹீரோவானவர் சிவாஜி கணேசன். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வந்த இந்த படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து பணம், திரும்பி பார், பரதேசி, கண்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த சிவாஜி 1954-ம் ஆண்டு மனோகரா என்ற படத்தில் நடித்திருந்தார், இந்த படம் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற வரும் முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கிறது.
கலைஞர் கருணாநிதி திரைக்கதை எழுதிய இந்த படத்தில், சிவாஜி கணேசன், டி.ஆர்.ராஜகுமாரஜ, கண்ணாம்பாள், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய மனோகரா நாடகத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தை எல்.வி.பிரசாத் இயக்கியிருந்தார், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் தயாரான இந்த படத்தில் ஒரே நேரத்தில், தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் சிவாஜி கணேசன் நடித்துள்ளார். இது கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பெற வேண்டிய தகவல் என்று, மருது மோகன் என்பவர் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், சிவாஜி கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெறும் வகையில் ஒரு சாதனையை செய்துள்ளார். மனோகரா படத்தில் அவரை சங்கிலியால் கட்டி இழுத்து செல்வது போன்ற ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சியில் வசனத்தை சரியான பேசி சிவாஜி நடித்துவிட்டார். படத்தின் இயக்குனர் எல்.வி.பிரசாத், சிவாஜி உங்களுக்கு தெலுங்கு தெரியும் தானே என்று கேட்க, அவரும் தெரியும். என்ற கூறியுள்ளார். அப்போது இந்த வசனத்தை தெலுங்கிலும் எடுக்கலாம். ஒருநாள் சொல்லுங்கள் என்று கூறியள்ளார்.
இதை கேட்ட சிவாஜி என்ன ஒருநாள் இப்போதே எழுதி கொடுங்கள் எடுத்துவிடலாம் என்ற கூறியுள்ளார். அதை கேட்டு எல்.வி.பிரசாத் வசனத்தை தெலுங்கில் எழுதி கொடுக்க, சிவாஜி சரியாக பேசி நடிப்பாரா என்ற சந்தேகம் அங்கிருந்தவர்களுக்கு வந்துள்ளது. ஆனாலும் சிவாஜி உடனடியாக மனப்பாடம் செய்து நான் ரெடி டேக் போகலாம் என்று கூறியுள்ளார். அதன்பிறகு படப்பிடிப்பு தொடக்க, தமிழில் பேசி நடித்தபோல் தெலுங்கிலும் பேசி அசத்தியுள்ளார். இந்தியிலும் பேசியதாக தகவல் உண்டு. அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.