/indian-express-tamil/media/media_files/2024/11/04/rDCp3YEoYMSQtkUyzZan.jpg)
தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் வசூலை முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
ரங்கூன் படத்தின் மூலம் இயக்குரான அறிமுகமான ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ‘அமரன்’. மறைந்த இந்திய ராணுவ மேஜர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து நடித்திருந்தனர். தீபாவளி தினத்தை முன்னிட்டு, அக்டோபர் 31-ந் தேதி வெளியான இந்த படம், 2024 ஆம் ஆண்டின் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக மாறியுள்ளது.
வெளியான 10 நாட்களில், ‘அமரன்’ தமிழ்நாட்டில் ரூ 100 கோடி உலகளவில் ரூ 200 கோடி வசூலை எட்டியுள்ளது. முதல் வாரத்தில் ரூ 89 கோடி வசூலித்த அமரன் படம், இரண்டாவது வெள்ளிக்கிழமை ரூ 5.50 கோடி வசூலித்த நிலையில், ஒன்பது நாள் மொத்த வசூல் ரூ 94.50 கோடியாக மாறியது. இதன் மூலம் அமரன் படம், ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வேட்டையன்’ படத்தின் (ரூ.95) வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் முந்தைய வெற்றியான ‘டான்’ (2022) படத்தின் வசூலை இரட்டிப்பாக்கும் பாதையில் ‘அமரன்’ படம் பயணித்து வருகிறது. 2024 ஆம் ஆண்டில் உலகளவில் அதிக வசூல் செய்த இரண்டாவது தமிழ்த் திரைப்படம் என்ற பெருமை ‘அமரன்’ பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், நடப்பு ஆண்டில், விஜயின் பாக்ஸ் ஆபிஸ் சாம்பியனான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் இன்னும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், சாய் பல்லவி அவரது திரை மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகவும் நடித்துள்ள ‘அமரன்’ படத்தில் ராகுல் போஸ் மற்றும் புவன் அரோரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘லக்கி பாஸ்கர்,’ ‘ப்ளடி பிக்கர்,’ மற்றும் ‘பிரதர்’ உட்பட 3 படங்களுடன் வெளியானாலும் அமரன் படம் மற்ற படங்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.
‘இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்: ட்ரூ ஸ்டோரிஸ் ஆஃப் மாடர்ன் மிலிட்டரி ஹீரோஸ்’ என்ற புகழ்பெற்ற புத்தகத்தின் அடிப்படையில், ‘அமரன்’ இந்தியாவின் நவீன ராணுவ வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் படம்பிடித்து, உத்வேகம் தரும் நிஜ வாழ்க்கைக் கதையை பெரிய திரையில் கொண்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.