Advertisment

தீபாவளி பண்டிகையை குறி வைத்த எஸ்.கே: அமரன் படம் ரிலீஸ் குறித்து முக்கிய அப்டேட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள அமரன் படம் எப்போது வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Sivakarthikeyan amara

சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தயாராகியுள்ள அமரன் படம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முனனணி நடிகராக உயாந்தவர் சிவகார்த்திகேயன். திரைப்படங்களில் அவ்வப்போது சிறுசிறு வேடங்களில் நடித்த மெரினா படததின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன், தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சிங்கம், ரஜினி முருகன், காக்கிச்சட்டை, எதிர்நீச்சல் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்துள்ள சிவகார்த்திகேயன், கனா என்ற மெகாஹிட் படத்தை தயாரித்து வெற்றி கண்டார். தற்போது தயாரிப்பு நடிப்ப என பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து அமரன் படம் வெளியாக உள்ளது. இந்திய ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளர்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சாய் பல்லவி, புவன் அரோரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதே சமயம்,டீசரில் சிவகார்த்திகேயன் கெட்ட வார்த்தை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் அமரன் படத்திற்காக எதிர்பார்ப்ப ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், படம் எப்போது வெளியாகும் என்பது தொடர்பான அறிவிப்ப தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபா 31-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்ப சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை எற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா குறித்த அப்டேட்களுக்காக காத்திருக்கின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivakarthikeyan Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment