கமல்ஹாசன் - சிவகார்த்திகேயன் கூட்டணி: அமரன் டிரெய்லர் குறித்து முக்கிய அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல்ஹாசன் தயாரித்துள்ள அமரன் படத்தின் டிரெய்லர் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல்ஹாசன் தயாரித்துள்ள அமரன் படத்தின் டிரெய்லர் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Amaran Siva

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள அமரன் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,

Advertisment

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முனனணி நடிகராக உயாந்தவர் சிவகார்த்திகேயன். திரைப்படங்களில் அவ்வப்போது சிறுசிறு வேடங்களில் நடித்த மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.  நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்துள்ள சிவகார்த்திகேயன், கனா என்ற மெகாஹிட் படத்தை தயாரித்து வெற்றி கண்டார்.

தற்போது தயாரிப்பு நடிப்ப என பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து அமரன் படம் தயராகியுள்ளது. இந்திய ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளர். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சாய் பல்லவி, புவன் அரோரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதே சமயம்,டீசரில் சிவகார்த்திகேயன் கெட்ட வார்த்தை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் அமரன் படத்திற்காக எதிர்பார்ப்ப ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதேபோல் அமரன் படம் குறித்து அவ்வப்போது வெளியாகி வரும் தகவல்கள் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment
Advertisements

அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31-ந் தேதி வெளியாக உள்ள அமரன் படத்தின் டிரெய்லர் இன்று (அக்டோபர் 23) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு டிரெய்லர் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sai Pallavi Sivakarthikeyan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: